Home > செய்திகள் > தொற்றிலிருந்து மெல்ல மீளும் இந்தியா!!

தொற்றிலிருந்து மெல்ல மீளும் இந்தியா!!

இந்தியாவில் புதிதாக 24,010 பேர் மட்டுமே கொரோனாவிடம் சிக்கியிருக்கும் நிலையில், நாடு முழுவதும் பாதிப்பு வேகமாக சரிந்து வருகிறது.

இன்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் புதிதாக பாதிக்கப்பட்ட 24,010 பேரையும் சேர்த்து, இந்தியாவில் இதுவரை 99 லட்சத்து 56 ஆயிரத்து 558 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் கடந்த 24 மணி நேரத்தில் 355 பேர் கொரோனாவால் மரணமடைந்துள்ளனர். இதனால் இந்தியாவின் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 44 ஆயிரத்து 451ஆக உயர்வடைந்துள்ளது.

இந்தியாவில் 99 லட்சத்துக்கு மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ள நிலையில், அந்தவகையில் மொத்தம் 94 லட்சத்து 89 ஆயிரத்து 740 பேர் இதுவரை தொற்றில் இருந்து மீண்டுள்ளனர்.

இதில் இன்று காலை வரையிலான 24 மணி நேரத்தில் குணமடைந்த 33 ஆயிரத்து 291 பேரும் அடங்குவர்.

இவ்வாறு அதிகமான எண்ணிக்கையில் கொரோனா நோயாளிகள் குணமடைந்திருப்பதால், ஆஸ்பத்திரிகளில் சிகிச்சையில் இருக்கும் நோயாளிகளின் எண்ணிக்கை வேகமாக சரிந்து வருகிறது.

இன்று காலை நிலவரப்படி வெறும் 3 லட்சத்து 22 ஆயிரத்து 366 பேர் மட்டுமே சிகிச்சையில் இருந்தனர்.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆா்) தகவல்படி டிசம்பா் 16-ஆம் தேதி வரை 15,78,05,240 கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில் புதன்கிழமை மட்டும் 11,58,960 பரிசோதனைகள் நடைபெற்றுள்ளன.

Leave a Reply