Home > செய்திகள் > நடிகர் ரஜினிக்கு சச்சின் பிறந்த நாள் வாழ்த்து

நடிகர் ரஜினிக்கு சச்சின் பிறந்த நாள் வாழ்த்து

நடிகர் ரஜினிகாந், தனது 70வது பிறந்தநாளை இன்று (சனிக்கிழமை) கொண்டாடி வருகின்றார்.

மேலும், அவருக்கு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் என பலரும் தங்களது வாழ்த்துக்களை தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் பிரபல கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், ரஜினிக்குப் பிறந்த நாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

சச்சின் டெண்டுல்கர், தனது ருவிட்டர் பக்கத்திலேயே நடிகர் ரஜினிகாந்துக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

குறித்த ருவிட்டர் பதிவில், பிறந்த நாள் வாழ்த்துகள் தலைவா. கடவுள், உங்களுக்கு நீண்ட, ஆரோக்கியமான வாழ்வை வழங்கட்டும் என்று  சச்சின் டெண்டுல்கர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply