இந்தியாவில் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட சதித் திட்டம் தீட்டிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பை சேர்ந்த நசீர் என்பவருக்கு ஏழு வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து டெல்லி நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பில்;
குற்றச் சதி, பயங்கரவாதச் செயலில் ஈடுபட சதி திட்டம் தீட்டியமை, பயங்கரவாதச் செயலுக்கு ஆட்சேர்ப்பு, பயங்கரவாத அமைப்பில் உறுப்பினராக இருப்பது, பயங்கரவாத அமைப்பை ஆதரிப்பது ஆகிய சட்டப் பிரிவுகளின் கீழ் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
மேலும் நசீர் தனது குற்றத்தைக் ஒப்புக்கொண்டு தண்டனையைக் குறைக்குமாறு நீதிமன்றத்தில் முறையிட்டதாகவும் அவருடை வழக்குரைஞர் தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டைச் தலைமையிடமாகக் கொண்டு செயற்பட்டு வரும் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த முகம்மது நசீரை தேசியப் புலனாய்வு முகமை (என்ஐஏ) பொலிஸார் கைது செய்து அவர் மீது வழக்குப் பதிவு செய்திருந்தனர்.
அத்துடன் நசீரிடம் பெறப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டு ஏனையவர்களை தேடும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளன.