Home > செய்திகள் > பறவை காய்ச்சல் பரவலைத் தடுக்க உஷார் நிலை

பறவை காய்ச்சல் பரவலைத் தடுக்க உஷார் நிலை

பறவை காய்ச்சல் பரவலை தடுக்க கன்னியாகுமரி, தென்காசி உள்பட 6 மாவட்டங்களில் உஷார்படுத்தப்பட்டு, கேரளாவில் இருந்து வரும் வாகனங்கள் 24 மணி நேரமும் கண்காணிக்கப்படுகின்றன.

கேரளாவில் ஆலப்புழா, கோட்டயம் மாவட்டங்களில் உள்ள பண்ணைகளில் வளர்க்கப்பட்ட வாத்து, கோழி உள்ளிட்ட பறவைகள் சமீபத்தில் நோய் வாய்ப்பட்டு இறந்தது.

இதுபற்றி கேரள கால்நடைத்துறையினர் நடத்திய ஆய்வில் ஒருவித வைரஸ் பாதிப்பால் பறவைகள் இறந்தது தெரியவந்தது.

இந்த வைரஸ் மூலம் பறவை காய்ச்சல் பரவலாம் என்பதோடு மனிதர்களுக்கும் இதன் மூலம் பாதிப்பு ஏற்படும் என்று கண்டறியப்பட்டது.

இதையடுத்து கோட்டயம், ஆலப்புழா மாவட்டங்களில் பறவை பண்ணைகளில் வளர்க்கப்பட்ட சுமார் 40 ஆயிரம் பறவைகளை உடனடியாக அழிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்கான நடவடிக்கையை கேரள கால்நடைத்துறை அதிகாரிகள் மேற்கொண்ட னர்.

கேரளாவின் அண்டை மாநிலமான தமிழகத்திற்கு கேரளாவில் இருந்து கறிக்கோழிகள், தீவனங்கள் உள்ளிட்டவை வாகனங்கள் மூலம் கொண்டு வரப்படு
வது வழக்கம்.

கேரளாவில் பறவை காய்ச்சல் பரவி வரும் நிலையில் தமிழகத்திலும் இப்பாதிப்பு ஏற்படாமல் இருக்க தமிழக கால்நடைத்துறை அதிகாரிகள் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்கள்.

தமிழக கால்நடை பராமரிப்புத்துறை இயக்குனர் ஞானசேகரன் இதுபற்றி கூறும்போது,

கேரளாவையொட்டி உள்ள தமிழக மாவட்டங்களான கன்னியாகுமரி, தென்காசி, தேனி, கோவை, திருப்பூர் மற்றும் நீலகிரி மாவட்ட எல்லைகளில் 26 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இங்கு கேரளாவில் இருந்து வரும் வாகனங்கள் 24 மணி நேரமும் கண்காணிக்கப்படும்.

கேரளாவில் இருந்து பறவை தீவனங்களோ, கறிக் கோழிகளையோ தமிழகத்திற்கு கொண்டு வரவேண்டாம் என அறிவுறுத்தி உள்ளோம். தமிழகத்திற்குள் நுழையும் அனைத்து வாகனங்களையும் கிருமி நாசினி மூலம் சுத்தப்படுத்தி அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.

Leave a Reply