Home > அரசியல் > பிரதமரின் விவகாரத்தில் நான் ஏன் மூக்கை நுழைக்க வேண்டும். இதை வைத்து நான் ஏன் அரசியல் செய்ய வேண்டும் – மம்தா பானர்ஜி

பிரதமரின் விவகாரத்தில் நான் ஏன் மூக்கை நுழைக்க வேண்டும். இதை வைத்து நான் ஏன் அரசியல் செய்ய வேண்டும் – மம்தா பானர்ஜி

பிரதமர் மோடி ஏற்கனவே 2 முறை டிவி.யில் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். கடந்த மாதம் 22ம் தேதி மக்கள் சுய ஊரடங்கு பின்பற்ற வலியுறுத்தினார். அதற்கு 2 நாட்கள் கழித்து 24ம் தேதி 2வது முறை உரையாற்றும் போது, 21 நாட்கள் ஊரடங்கு அமல் படுத்துவதாக அறிவித்தார். இந்நிலையில், நேற்று காலை 9 மணிக்கு வீடியோ ஒன்றை சமூக இணையதளத்தில் அவர் வெளியிட்டார்.

அதில் அவர் 11 நிமிடங்கள் உரையாற்றினார். உரையில் அவர் கூறியதாவது: முடக்க காலத்தில் மக்கள் வீட்டுக்குள் இருந்து சமூக விலகல் என்ற லட்சுமண் ரேகையை தாண்டக் கூடாது. வீட்டில் மக்கள் தனிமையாக உணரலாம். ஆனால், நாட்டு மக்கள் 130 கோடி பேரின் ஒட்டு மொத்த பலமும், நம் ஒவ்வொருவருக்கு உள்ளேயும் இருக்கிறது என்பதை உணர வேண்டும். வரும் ஞாயிற்றுக்கிழமை ( நாளை) இரவு 9 மணிக்கு  வீட்டின் அனைத்து மின்சார விளக்குகளையும் 9 நிமிடங்கள் அணைத்து விட்டு, வீட்டின் வாசல் அல்லது பால்கனியில் நின்று மெழுகுவர்த்தி அல்லது விளக்கு அல்லது செல்போன் டார்ச் ஆகியவற்றை ஒளிரச் செய்ய வேண்டும். அவ்வாறு ஒளிரச் செய்யும்போது, ‘சூப்பர் பவர்’ பிரகாசம் ஏற்படும். அது, நாம் தனியாக இல்லை, அனைவரும் கொரானாவுக்கு எதிராக ஒட்டு மொத்த தீர்மானத்துடன் போராடுகிறோம் என்பதை உணர்த்தும் என்றார். 

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பிரதமரின் விவகாரத்தில் நான் ஏன் மூக்கை நுழைக்க வேண்டும். இதை வைத்து நான் ஏன் அரசியல் செய்ய வேண்டும். இதை ஏன் நீங்கள் அரசியலாக்க முயற்சிக்கிறீர்கள். தயவுசெய்து அதை செய்ய வேண்டாம் என்றார்.

You may also like
அம்மன் ஆலயம் கட்ட உதவும் ஒசூர் திமுக எம்எல்ஏ சத்யா!
ஒடிசா உள்ளிட்ட 6 மாநிலங்களில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு
பிறந்தநாள் அன்று அக்காவை நினைத்து உருகிய திருமா!
பாலசுப்ரமணிக்காக உருகிய இளையராஜா

Leave a Reply