புதிய வகை உருமாறிய கொரோனா பரவலால் பிரிட்டனுக்கான விமான போக்குவரத்து தடையை இந்திய மத்திய அரசு மேலும் ஒரு வாரம் நீடித்துள்ளது.
பிரித்தானியாவில் பரவும் புதிய வகை உருமாறிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது,
இந்த நிலையில் அந்த நாட்டுடனான விமான போக்குவரத்தை இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் தற்காலிகமாக தடை செய்துள்ளன.
இந்தியாவில் நாளை (31) வரை விமான போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.
தொடர்ந்தும் அங்கிருந்து வருபவர்களில் 20 பேருக்கு புதிய உருமாறிய வைரஸ் தொற்று கண்டறியப்படும் நிலையில், பிரிட்டனுடனான விமான போக்குவரத்து தடை, ஜனவரி 7 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
இத்தகவலை விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தெரிவித்தார்.