சீனாகிட்ட தமிழ்நாடு ஒரு லட்சம் விரைவு சோதனைக் கருவிகளை கேட்டதாக ஏப்ரல் 8 ஆம் தேதி சுகாதாரத்துறை அறிவித்தது. பிறகு ஓரு நாளில் வந்துசேரும் என்று முதல்வரும் அறிவித்தார். அதுக்கடுத்து 10 ஆம் தேதி பேசிய தலைமைச் செயலாளர் மத்திய அரசுதான் நமக்கு கொடுக்கும் என்று சொன்னார். இதற்கிடையில் சீனா அனுப்பவிருந்த கருவிகள் அமெரிக்காவுக்கு போய்விட்டதாக கூறப்பட்டது
இந்நிலையில்தான் வரும் புதன்கிழமை சீனாவிலிருந்து கொரோனா நோய் கண்டறியும் விரைவு சோதனைக் கருவி இந்தியாவுக்கு வந்துசேரும் என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதுவாவது நடக்க வேண்டும் என்று மக்கள் பிரார்த்தனை செய்கிறார்கள்.