Home > அரசியல் > புதிய சட்டங்களால் வேளாண் துறைக்கு அதிக முதலீடு கிடைக்கும் – பிரதமர் மோடி

புதிய சட்டங்களால் வேளாண் துறைக்கு அதிக முதலீடு கிடைக்கும் – பிரதமர் மோடி

புதிய சட்டங்களால் வேளாண் துறைக்கு அதிக முதலீடு கிடைக்கும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

இந்திய தொழில் வர்த்தக சபைகளின் கூட்டமைப்பின் மாநாட்டு ஆரம்ப விழாவில் கலந்துகொண்டு உரை நிகழ்த்தும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அவர் மேலும் கூறியுள்ளதாவது,

“விவசாயத்தை ஊக்குவிப்பதற்காகவே புதிய வேளாண் சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இதன்மூலம் கூடுதல் சந்தை வசதிளை பெற வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது. வேளாண் சீர்திருத்தங்கள், விவசாயிகளுக்கு புதிய சந்தைகளையும் வாய்ப்புகளையும் கொண்டு வரும். அவை தொழில்நுட்பத்திலிருந்து கிடைக்கும்.

இது விவசாயத்தில் அதிக முதலீட்டைக் கொண்டுவரும். இது விவசாயிகளுக்கு,குறிப்பாக சிறு விவசாயிக்கு மிகவும் பயனளிக்கும். மேலும், விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை டிஜிட்டல் தளங்கள் வாயிலாகவும் விற்கலாம்.

விவசாயிகளின் வருமானத்தை அதிகரிப்பதற்கும் அவர்களை வளமானவர்களாக மாற்றுவதற்கும் இந்த முயற்சிகள் அனைத்தையும் நாங்கள் எடுத்து வருகிறோம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply