Home > செய்திகள் > பெண் சமூக ஆர்வலருக்கு நேர்ந்த கதி!

பெண் சமூக ஆர்வலருக்கு நேர்ந்த கதி!

ஆப்கானிஸ்தானில் பெண் சமூக ஆர்வலர், அவரது சகோதரனும் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.

ஆப்கானிஸ்தானின் கபிசா மாகாணத்தை சேர்ந்த பெண் சமூக ஆர்வலர் பிரஸ்டா கோஹிஸ்டனி (29) பெண் உரிமைகளுக்காக போராடி வருகிறார்.

இவர் அந்நாட்டின் மிகவும் பிரபலமான பெண் உரிமைகள் சமூக ஆர்வலாராக இருந்து வந்தார்.

கபிசா மாகாணத்தின் கோஹிஸ்டன் மாவட்டத்தில் உள்ள தனது வீட்டிற்கு வெளியே பிரஸ்டா அவரது சகோதரனுடன் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினார்.

மர்மநபர் நடத்திய இந்த துப்பாக்கிச்சூட்டில் பிரஸ்டா கோஹிஸ்டனியும் அவரது சகோதரரும் ரத்த வெள்ளத்தில் சரிந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த துப்பாக்கிச்சூடு தாக்குதல் சம்பவத்திற்கு எந்த ஒரு பயங்கரவாத அமைப்பும் தற்போதுவரை பொறுப்பேற்கவில்லை.

பெண் சமூக ஆர்வலர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்திற்கு ஆப்கானிஸ்தான் எதிர்க்கட்சி தலைவர் அப்துல்லா அப்துல்லா கண்டனம் தெரிவித்துள்ளார்.

Leave a Reply