Home > அரசியல் > பொங்கல் நிதியுதவி அறிவிப்பினை பொறுக்க முடியவில்லை: ஸ்டாலினைச் சாடும் எடப்பாடி

பொங்கல் நிதியுதவி அறிவிப்பினை பொறுக்க முடியவில்லை: ஸ்டாலினைச் சாடும் எடப்பாடி

பொங்கல் நிதியுதவி அறிவிப்பினை பொறுக்க முடியாமல் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தன் மீது குற்றம் சாட்டுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார்.

தமிழக முதல்வர் பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் அடங்கிய 97 பக்க பமுறைப்பாட்டு பட்டியலை தி.மு.க. தலைவர் ஸ்டாலின் இன்று ஆளுநரிடம் கையளித்துள்ளனர்.

இந்நிலையில் பொங்கல் நிதியுதவி அறிவிப்பினை பொறுக்க முடியாமல் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தன் மீது குற்றம் சாட்டுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார்.

தூதுக்குடியில் இடமபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய முதலமைச்சர், முதல்வராக தான் பதவியேற்றது முதல் தன்மீது எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து ஊழல் குற்றச்சாட்டினை கூறி வருகிறார் என குறிப்பிட்டார்.

ஆனால் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் கூறுவது அனைத்தும் பொய் குற்றச்சாட்டு என்றும் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply