போரூர் அருகே போலீஸ் என கூறி கொள்ளையில் ஈடுபட்ட மேலும் 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை கே.கே. நகரில் தொழிலதிபர் பாண்டியன் வீட்டிற்குள் கடந்த 9-ம் தேதி அத்துமீறி நுழைந்த மர்ம கும்பல் ஒன்று “சிறப்பு குற்றப்பிரிவு போலீஸ்” என்று கூறி அங்கிருந்து 12 லட்சம் ரொக்கம் 45 பவுன் நகைகளை சுருட்டிக் கொண்டு தப்பி சென்றனர்.
கே.கே. நகர் போலீசார் 8பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்
இந்த நிலையில் தர்மபுரியைச் சேர்ந்த விஜய் பெரம்பலூரைச் சேர்ந்த குமார் ஆகிய 2 பேரையும் தனிப்படை போலீசார் நேற்று இரவு கைது செய்தனர்.
அவர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
கொள்ளைக்கு மூளையாக செயல்பட்டு பணம் நகைகளுடன் தலைமறைவாக உள்ள பூமிநாதன் என்பவரை போலீசார் தேடி வருகிறார்கள்.