Home > செய்திகள் > மதுரையில் போக்குவரத்து மாற்றம்

மதுரையில் போக்குவரத்து மாற்றம்

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 113-வது ஜெயந்தி விழா மற்றும் 58வது குருபூஜை இன்று (30 ஆம் தேதி) கொண்டாடப்படுகிறது.

இதனால் ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு தங்க கவசம் அணிவிக்கப்படும். அத்துடன் மதுரை கோரிப்பாளையத்தில் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் குருபூஜை நடைபெறும்.

இந்நிலையில் தேவர் குருபூஜை விழாவை முன்னிட்டு மதுரை நகர் பகுதியில் இன்று போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இரவு 10.30 மணி வரை கனரக வாகனங்கள் மதுரை நகர் பகுதிகளில் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாநகர காவல் தெரிவித்துள்ளது.

அத்துடன் காவல்துறையினரால் அனுமதி பெற்ற வாகனங்கள் மட்டுமே தேவர் சிலையை நோக்கி செல்ல அனுமதி அளிக்கப்படும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மதுரையில் உள்ள தேவர் சிலைக்கு முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தவுள்ளனர்.

You may also like
மதுரை- சென்னை தேஜஸ் சிறப்பு ரயில் சேவை இன்று முதல் தொடக்கம்
வெப்பச்சலனம் காரணமாக 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
மதுரையில் ஒரு புத்தக ஐயா
முட்டை கொத்து பரோட்டா செய்ய

Leave a Reply