Home > செய்திகள் > மின்சாரம் தாக்கி தொழிலாளி பரிதாப உயிரிழப்பு

மின்சாரம் தாக்கி தொழிலாளி பரிதாப உயிரிழப்பு

சேந்தமங்கலம் அருகே மின்சாரம் தாக்கி சென்ட்ரிங் தொழிலாளி பலியானார்.

சேந்தமங்கலம் அருகே உள்ள நஞ்சுண்டாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் லெனின் (வயது 37). கட்டிடங்களுக்கு சென்ட்ரிங் செய்யும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

மேலும் அப்பகுதியில் உள்ள ஒரு விவசாய நிலத்தை குத்தகைக்கு எடுத்து கவனித்து வந்தார்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு லெனின் விவசாய நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக மின்மோட்டார் அறைக்கு சென்றார்.

அப்போது லெனின் மோட்டாரை ஆன் செய்தபோது எதிர்பாராதவிதமாக அவரை மின்சாரம் தாக்கியது.

இதில் அவர் சுருண்டு விழுந்து அங்கேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த அவருடைய மனைவி சசிகலா (27) அங்கு சென்று கணவரின் இறந்து கிடப்பதை பார்த்து கதறி அழுதார்.

இதுகுறித்து அவர் சேந்தமங்கலம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று லெனினின் உடலை கைப்பற்றி நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்துபோன லெனினுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply