Home > அரசியல் > முதல்வர் பழனிசாமி காரின் பின்னால் அணிவகுத்த கார்கள் மோதி விபத்து!

முதல்வர் பழனிசாமி காரின் பின்னால் அணிவகுத்த கார்கள் மோதி விபத்து!

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்ற வாகனம் பின்னால் அணிவகுத்துச் சென்ற கார்கள் திடீர் விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சட்டசபை தேர்தலையொட்டி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுக்க சூறாவளி சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார்.

இன்று தூத்துக்குடி மாவட்டத்தில் அவர் பல்வேறு பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது, மறைந்த பி.எச். பாண்டியனின் சொந்த ஊரான கோவிந்தபேரியில் அவரது நினைவாக 20 சென்ட் பரப்பளவில் நினைவு மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.

அவரது திருவுருவச்சிலையும் நிறுவப்பட்டுள்ளது. அதனை தமிழக முதல்வர் பழனிசாமி இன்று திறந்து வைக்க சென்றார்.

அப்போது எடப்பாடி பழனிசாமி வாகனத்தை தொடர்ந்து ,அதிமுக முக்கிய பிரமுகர்கள் வாகனத்தில் அணிவகுத்து சென்றனர்.

அப்போது வாகனங்கள் சென்று கொண்டிருக்கும்போது முன்னால் சென்ற கார் மீது மற்றொரு கார் எதிர்பாராத விதமாக மோதியது. இதில் காரின் முன்பக்கம் சேதமானது.

உடனே போலீசார் அந்த வாகனத்தை சாலையில் இருந்து நகர்த்தி மற்ற வாகனம் செல்வதற்கு வழிவிட்டனர். இந்த சம்பவத்தல் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

நல்லவேளையாக முதல்வர் பயணித்த காருக்கு இதனால் பாதிப்பு எதுவும் இல்லை. அதேபோல் விபத்துக்குள்ளான கார்களில் பயணித்தவர்களின் உயிருக்கும் ஆபத்து இல்லை என காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply