Home > செய்திகள் > முன்னாள் இத்தாலி கால்பந்து வீரர் காலமானார்

முன்னாள் இத்தாலி கால்பந்து வீரர் காலமானார்

இத்தாலி நாட்டின் புகழ்பெற்ற முன்னாள் கால்பந்து வீரரும், 1982 ஆம் ஆண்டு உலகக்கோப்பை போட்டியின் நாயகன் என்று போற்றப்படுபவருமான பவுலோ ரோஸீ, (வயது 64.) உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார்.

இந்த தகவலை அவரது மனைவி ஃபெடரிக்கா தனது சமூக வலைதள பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார். பவுலோ உயிரிழந்ததற்கான காரணத்தை அவரது மனைவி தெரிவிக்கவில்லை.

இருப்பினும் பவுலோ ரோஸீ நீண்ட நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்ததாக இத்தாலி நாட்டின் செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.

உலகின் தலைசிறந்த 125 கால்பந்து வீரர்களில் ஒருவர் என பிரேசில் கால்பந்து வீரர் பீலே இவரை கடந்த 2004 ஆம் ஆண்டு கவுரவப்படுத்தியுள்ளார்.

இவரது மறைவுக்கு உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply