Home > அரசியல் > மு.க.ஸ்டாலின்-கூட்டணி தலைவர்கள் உண்ணாவிரதத்துக்கு அனுமதி இல்லை!-

மு.க.ஸ்டாலின்-கூட்டணி தலைவர்கள் உண்ணாவிரதத்துக்கு அனுமதி இல்லை!-

சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் போராட்டங்கள் நடைபெறும் இடத்தில் உண்ணாவிரதம் இருக்க தி.மு.க. சார்பில் அனுமதி கேட்கப்பட்டு இருந்தது. ஆனால் அதற்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளனர்.

டெல்லியில் 20 நாட்களுக்கும் மேலாக விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்துக்கு ஆதரவாக தமிழகத்தில் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் போராட்டங்கள் நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சித் தலைவர்கள் பங்கேற்கும் உண்ணாவிரத போராட்டம் நாளை (18-ந்தேதி) சென்னை நுங்கம்பாக்கத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

இதையடுத்து உண்ணாவிரத போராட்டத்துக்கு முறைப்படி போலீசாரிடம் அனுமதியும் கேட்டுள்ளனர். நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் அருகில் போராட்டங்கள் நடைபெறும் இடத்தில் உண்ணாவிரதம் இருக்க தி.மு.க. சார்பில் அனுமதி கேட்கப்பட்டு இருந்தது. ஆனால் அதற்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளனர்.

வருகிற 19-ந்தேதி முதல் தான் அரசியல் கூட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனை காரணம் காட்டியே நாளை நடைபெறும் உண்ணாவிரத போராட்டத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply