Home > செய்திகள் > மோடியின் டிஜிடல் இந்தியா தோலுரித்து கிண்டல் செய்யும் கொரியா டைம்ஸ் கார்ட்டூன்!

மோடியின் டிஜிடல் இந்தியா தோலுரித்து கிண்டல் செய்யும் கொரியா டைம்ஸ் கார்ட்டூன்!

மோடி தலைமையிலான மத்திய அரசு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்த்தை ரத்து செய்துவிட்டு, கடந்த ஐந்து மாதங்களாக அங்கு மக்களை வீட்டுச் சிறையில் அடைத்து வைத்திருக்கிறது. வெளியுலகத் தொடர்புகளை துண்டித்து, காஷ்மீரில் என்ன நடக்கிறது என்பதை தெரிந்துகொள்ள முடியாமல் தடுத்திருக்கிறது.

அதைப்பற்றி உலகம் கவனத்தில் கொள்ளும் சமயத்தில், திடீரென்று இந்தியாவின் குடியுரிமைச் சட்டத்தை திருத்தி, இஸ்லாமியர்களை குறிவைத்து நாடற்றவர்களாக மாற்றும் முயற்சியை மோடி அரசு தொடங்கியது.

நாடு முழுவதும் கோடிக்கானோர் வேலைகளை பறிகொடுத்து, தொழில்களை மூடி, பொருளாதாரம் கடும் வீழ்ச்சியைச் சந்தித்திருக்கிறது. இந்நிலையில் முக்கியமான அந்த பிரச்சனைகளில் இருந்து திசைதிருப்பி, மக்களை போராட்டக்களத்தில் தள்ளுகிறது மோடி அரசு.

காஷ்மீரில் இணையச் சேவையைத் துண்டித்து மக்களுடைய தகவல் அறியும் சுதந்திரத்தை பறித்திருக்கும் மத்திய அரசை உச்சநீதிமன்றமே கண்டித்திருக்கிறது. காஷ்மீரில் ஒருவிதமான மயான அமைதியைத்தான் மத்திய அரசு உருவாக்கி இருக்கிறது.

கம்யூனிஸ்ட் நாடுகளே வெளியுலகத் தொடர்புகளை கொடுக்க தயங்காத நிலையில், ஜனநாயக நாடான இந்தியா, ஒரு மாநில மக்களையே இருட்டில் தள்ளியிருப்பதை கொரியா டைம்ஸ் என்ற பத்திரிகை கார்ட்டூனாக கிண்டல் செய்துள்ளது.

சில நாட்களுக்கு முன், இந்தியாவின் குடியுரிமைச் சட்டத்தை கண்டித்து கொரியா குடிமக்கள் போராட்டம் நடத்திய வீடியோ வைரலானது குறிப்பிடத்தக்கது.Attachments area

Leave a Reply