Home > செய்திகள் > மோல்டோவாவின் ரஷ்ய சார்பு பிரதமர் இராஜினாமா!

மோல்டோவாவின் ரஷ்ய சார்பு பிரதமர் இராஜினாமா!

மோல்டோவாவின் ரஷ்ய சார்பு பிரதமர் அயொன் சிச்சு (Ion Chicu) பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தலுக்கு வழி வகுக்கவும், இயல்புநிலையை ஏற்படுத்தவும் இவ்வாறு இராஜினாமா செய்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் சோவியத் மாநிலத்தில் நவம்பர் 2019 முதல் ரஷ்ய சார்பு அரசாங்கத்தை சிச்சு வழிநடத்தியிருந்தார்.

இந்நிலையில், நாட்டில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மேற்கத்தேய சார்பு ஜனாதிபதி மியா சன்டு பதவியேற்பதற்கு ஒரு நாள் முன்னதாக பிரதமர் ராஜினாமாவை அறிவித்துள்ளார்.

Leave a Reply