Home > செய்திகள் > ரூ.12ஆயிரம் கோடி கடனை திருப்பி அளிக்க சம்மதம் ! – விஜய் மல்லையா

ரூ.12ஆயிரம் கோடி கடனை திருப்பி அளிக்க சம்மதம் ! – விஜய் மல்லையா

இந்தியாவில் முன்னணி தொழில் அதிபராக இருந்தவர் மல்லையா. விஜய் மல்லையா என்றாலே கண்ணதாசன் பாடல் வரிகளைப் போல ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு ஒரு கோல மயில் என் துணையிருப்பு என்பதாகவே இருந்தது. பின்னர் கிங் பிஷர் விமான போக்குவரத்தில் பெரிய நஷ்ட அடி விழ நொறுங்கிப்போனார்.

அடுத்ததாக வந்தது பிரச்ச்னை வங்கிகளில் வங்கிய 9 ஆயிரம் கோடிக்கு மேலான தொகையை திரும்ப செலுத்தாமல் நாட்டை விடு ஓடி இன்று லண்டனின் தலைமறைவாக வாழ்கிறார் விஜய் மல்லையா. தற்போது அந்த கடன் தொகை வட்டியெல்லாம் சேர்த்தால் ரூ, 12 ஆயிரம் கோடியாக உயர்ந்து வராக்கடனாக நிலுவையிலுள்ளது.

ஆனாலும் இந்தியா அவரை நாடு கடத்த லண்டன் நீதிமன்ற உதவியை நாடியது. இதன் மீதான விசாரணை தற்போது நடைபெற்று வந்த நிலையில் மல்லையாவை இந்தியாவிடம் ஒப்படைப்பதாக லண்டன் நீதிமன்றம் கூறியது.

இந்நிலையில், விஜய் மல்லையா தனது டுவிட்டர் பக்கத்தில், தான் வங்கிகளிடம் பெற்ற கடன் முழுவதையும் திருப்பிச் செலுத்துவதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், கடனைத் திரும்ப பெற வங்கிகளும், எனது சொத்துகளை விடுவிக்க அமலாக்கத்துறையும் விரும்பவில்லை அதனால் நிதியமைச்சர் தலையிட்டு இதற்குத் தீர்வு காணவேண்டும் என தெரிவித்துள்ளார்.

You may also like
வட்டிக்கு வட்டி வசூலிப்பதை அனுமதிக்ககூடாது- மதுரை உயர்நீதிமன்றம்
பாரத ஸ்டேட் வங்கி லாபம் 52 சதவீதம் அதிகரிப்பு…
இந்திய பங்குச்சந்தை வரலாறு காணாத சரிவு
100 ஆண்டுகளில் இல்லாத பொருளாதார மற்றும் சுகாதார நெருக்கடியை இந்தியா சந்தித்து வருகிறது – சக்திகாந்த தாஸ்

Leave a Reply