Home > செய்திகள் > வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுங்கள்… இல்லாவிட்டால்: எச்சரிக்கும் விவசாயிகள்

வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுங்கள்… இல்லாவிட்டால்: எச்சரிக்கும் விவசாயிகள்

வேளாண் சட்டங்கள் தொடர்பான சட்டங்களை மத்திய அரசு ஏற்காவிட்டால் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட போவதாக விவசாய சங்கங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன.

விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் டெல்லியில் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கையில், மேற்படி குறிப்பிட்டுள்ளனர்.

இதன்போது தொடர்ந்து தெரிவித்த விவசாய பிரநிதிகள், “விவசாயிகளின் கோரிக்கையை மத்திய அரசு ஏற்காவிட்டால் படிப்படியாக போராட்டம் தீவிரப்படுத்தப்படும். டெல்லியை நாட்டின் பிற நகரங்களுடன் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலைகள் முடக்கப்படும்.

வேளாண்மை என்பது அரசமைப்பு சட்டத்தின்படி மாநில பட்டியலில் உள்ளது. இதன்படி வேளாண் சட்டம் இயற்றும் அதிகாரம் மாநில அரசுக்கே உள்ளது. மத்திய அரசுக்கு இல்லை.

எங்கள் கோரிக்கைகளை உடனடியாக ஏற்காவிட்டால் ரயில் மறியல் போராட்டங்கள் நடத்தப்படும். ஆலோசனைக்குப்பின் திகதியை விறைவில் அறிவிப்போம்” எனத் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply