Home > செய்திகள் > வேளாண் பொருள் கொள்முதலில் குறைந்தபட்ச ஆதரவு விலை தொடர்ந்தும் வழங்கப்படும்

வேளாண் பொருள் கொள்முதலில் குறைந்தபட்ச ஆதரவு விலை தொடர்ந்தும் வழங்கப்படும்

வேளாண் பொருள் கொள்முதலில் குறைந்தபட்ச ஆதரவு விலையை விவசாயிகளுக்கு வழங்குவது என்பது அரசின் நிர்வாக ரீதியாக எடுக்கப்பட்ட முடிவு. அதை அரசு தொடர்ந்து வழங்கும்’ என மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார்.

டெல்லி தெற்காசிய வெளிநாட்டு நிருபர்கள் மன்ற உறுப்பினர்களுடன் பேசிய அவர் மேற்படி தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் தெரிவித்துள்ள அவர், “வேளாண் பொருள் கொள்முதலில் குறைந்தபட்ச ஆதரவு விலையை விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் என்பதில் பிரதமர் மோடி தலைமையிலான அரசு உறுதியாக உள்ளது.

இந்தியாவில் வேளாண்மை என்பது பொருளாதாரத்தின் முதுகெலும்பு போன்றதாகும்.

மோடி தலைமையிலான அரசு விவசாயிகளின் வருமானத்தை 2022-ஆம் ஆண்டுக்குள் இரட்டிப்பாக்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்தி வருகிறது. மூன்று புதிய வேளாண் சட்டங்களும் மிகப் பெரிய விவசாயச் சீர்திருத்தங்களைக் கொண்டது.

இதுபோன்ற சீர்திருத்தங்களை நாடு இதுவரைக் கண்டதில்லை. விவசாயிகளுக்கு சந்தை சுதந்திரம், தொழில்முனைவோராவதை ஊக்குவித்தல், தொழில்நுட்பத்தை அணுகுதல் போன்றவற்றை இந்தச் சட்டங்கள் வழங்குகின்றன.

ஒரே இரவில் முடிவு எடுக்கப்பட்டு இந்தச் சட்டங்கள் உருவாக்கப்பட்டதல்ல. இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக பல விவாதங்களுக்குப் பிறகு நிபுணர்கள்இ பல்வேறு குழுக்களால் பரிந்துரைக்கப்பட்டவை.

கடந்த ஆறு ஆண்டுகளில் விவசாயிகளுக்குப் பயனளிக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை பிரதமர் மோடி தலைமையிலான அரசு எடுத்து வந்துள்ளது.

விவசாயத்தில் ஒரு புதிய சகாப்தத்தை மத்தியஅரசு கொண்டு வந்துள்ளது. போராடும் விவசாயச் சங்கங்களுடன் அரசு பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளது.

மேலும் வேளாண் சட்டங்களில் உள்ள ஒவ்வொரு உட்பிரிவு வாரியாக திறந்த மனதுடன் பேச்சுவார்த்தையைத் தொடர அரசு தயாராக உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

Leave a Reply