Home > செய்திகள் > வேளாண் மசோதாவை விமர்ச்சித்த அதிமுக எம்.பி.பாலசுப்பிரமணியம்

வேளாண் மசோதாவை விமர்ச்சித்த அதிமுக எம்.பி.பாலசுப்பிரமணியம்

வேளாண் சட்டம் மூலமாக மாநிலங்களின் உரிமை பறிக்கப்படுவதாக அதிமுக எம்.பி குற்றம்சாட்டியுள்ளார்.அத்தியாவசிய பொருட்கள் சட்டம் உள்பட வேளாண் சட்ட மசோதாக்களை மத்திய அரசு அண்மையில் மக்களவையில் அறிமுகப்படுத்தியது இதற்கு எதிர்ப்பு தெரிவித்து
பாஜகவின் கூட்டணிக் கட்சியைச் சேர்ந்த மத்திய அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் பாதல் தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்த மசோதாக்களை பெரும்பாலான கட்சிகள் எதிர்க்கும் நிலையில், விவசாயிகளுக்கு ஆதரவானது என அதிமுக ஆதரித்தது.
மக்களவையில் பேசிய அதிமுக எம்.பி ரவீந்திரநாத் குமார், “வேளாண் சட்டங்கள் தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்தும். இதன்மூலம் விவசாயிகள் இடைத் தரகர்களை சார்ந்திருக்க வேண்டிய அவசியமில்லை. அத்துடன், நாட்டில் எங்கும் தங்கள் தயாரிப்புகளை விற்க முடியும்” என்று தெரிவித்தார். மேலும், விவசாயிகளுக்கு மின்னணு வர்த்தகத்தில் பயிற்சி அளிக்கப்பட வேண்டும். அப்படி செய்தால் அவர்கள் மோசடிகளிலிருந்து தங்களை காத்துக்கொள்ள முடியும். விளைபொருட்களை கொண்டு செல்வதற்கு அவர்களுக்கு மானிய ஆதரவும் அளிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில், தமிழக விவசாயிகளுக்கு நன்மைபயக்கும் வகையில் வேளான் திட்டங்கள் உள்ளன. வேளாண் மசோதாக்களை எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் அரசியலாக்குகிறார். வேளாண் சட்டங்களால் விவசாயிகள், கொள்முதல் செய்வோர் என இருவர் நலனும் பாதுகாக்கப்படும். கிராமப்புறங்களில் உணவு பதப்படுத்துதல் போன்ற தொழில்கள் பெருகி வேலைவாய்ப்பு ஏற்படும்” என்று ஆதரவு தெரிவித்தார்.

இந்த நிலையில் இந்த மசோதாக்கள் மீது மாநிலங்களவையில் நேற்று(செப்டம்பர் 20) நடந்த விவாதத்தில், அதிமுக கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது. மசோதா மீது பேசிய எம்.பி எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம், குறைந்தபட்ச ஆதரவு விலை பற்றி மசோதாவில் எதுவும் குறிப்பிடப்படவில்லை. விவசாயிகளுக்கு அதுதான் மிகவும் முக்கியமான ஒன்று என்பதால், குறைந்தபட்ச ஆதரவு விலை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.

மேலும், இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால் பதுக்கல், கள்ளச்சந்தை உள்ளிட்டவற்றை தடுக்க முடியாத நிலை மாநில அரசுகளுக்கு ஏற்படும். இதன்மூலம் மாநில அரசின் அதிகாரம் பறிக்கப்படுகிறது. விவசாயத் துறையின் மீது மாநில அரசு சுயமாக எந்த முடிவையும் எடுக்க முடியாத நிலை ஏற்படும்.

மசோதாவை நிறைவேற்றும் முன் இவை அனைத்தையும் கருத்தில் கொள்ள வேண்டும். இதன்மூலம் வெளிநாட்டு நிறுவனங்களும், கார்பரேட் நிறுவனங்களும்தான் பயன்பெறும். விவசாயிகள் ஏமாற்றப்படக் கூடாது என்பதுதான் எங்களின் எண்ணம்என்று மாநிலங்களையில் பேசினார்.

You may also like
4.5 ஏக்கர் நெற்பயிரை அழித்த உத்தர பிரதேச விவசாயி..
எம் எல் ஏ மா. சுப்பிரமணியத்தின் மகன் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளார்.
அதிமுக வின் 49-வது ஆண்டு தொடக்க விழா
அதிமுகவின் 49ஆம் ஆண்டு தொடக்க விழா
உச்சநீதிமன்ற
மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

Leave a Reply