Home > செய்திகள் > 10 ரூபாய் நாணயத்துக்கு பிரியாணி கொடுத்தது ஒரு குற்றமா?

10 ரூபாய் நாணயத்துக்கு பிரியாணி கொடுத்தது ஒரு குற்றமா?

ஊரடங்கை மீறி பிரியாணி கடை நடத்திய உரிமையாளரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஊரடங்கை மீறி பிரியாணி கடை நடத்திய உரிமையாளரை போலீசார் கைது செய்துள்ளனர். விழுப்புரம் வழுதரெட்டி பகுதியை சேர்ந்தவர் அரவிந்த் (வயது 29). இவர் என்ஜினீயரிங் பட்டதாரி.

இவர் விழுப்புரம் புதிய பஸ் நிலையம் எதிரே, திருச்சி நெடுஞ்சாலையில் புதிதாக பிரியாணி கடை திறந்தார். இந்த கடையில் 10 ரூபாய் நாணயம் கொடுத்தால், சிக்கன் பிரியாணி வழங்கப்படும் என்று அறிப்பு வெளியிட்டார்.

இதையடுத்து பொதுமக்கள் 10 ரூபாய் நாணயம் கொடுத்து பிரியாணி வாங்க கடை முன்பு திரண்டனர்.

இதனால் விழுப்புரம்- திருச்சி நெடுஞ்சாலையில் பொதுமக்கள் ஆர்வமுடன் பிரியாணி வாங்க குவிந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதனை அறிந்த விழுப்புரம் தாலுகா போலீசார் கடையை மூடி அரவிந்தை கைது செய்தனர். பிரியாணி வாங்க குவிந்திருந்த பொது மக்கள் போலீசாரை கண்டதும் ஓட்டம் பிடித்தனர்.

கொரோனா ஊரடங்கில், பொதுமக்கள் கூட்டத்தை கூட்டியதாகவும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாகவும், அரவிந்த்மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.

Leave a Reply