ஜூன் 1ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரை 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும் என அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.
10ம் வகுப்பு தேர்வு அட்டவணை
ஜூன் – 1 – மொழிப்பாடம்
ஜூன் 3 – ஆங்கிலம்
ஜூன் 5 – கணிதம்
ஜூன் – 8 அறிவியல்
ஜூன் 10 – சமூக அறிவியல்
மார்ச் 24ம் தேதி நடைபெற்ற 12ம் வகுப்பு பொதுத்தேர்வை, பஸ் வசதி இல்லாததால், 36,842 மாணவர்கள் எழுத இயலவில்லை. இவர்களுக்காக, இந்த தேர்வு, ஜூன் 4ம் தேதி நடத்தப்பட உள்ளது.
12ம் வகுப்புக்கான தேர்வு விடைத்தாள்களை திருத்தும் பணி, மே 27ம் தேதி துவங்கும்.
கொரோனா காரணமாக தள்ளிவைக்கப்பட்ட பிளஸ் 1 வகுப்பின் ஒரு பாடத்திற்கான தேர்வு ஜூன் 2ல் நடைபெறும் என அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.