Home > செய்திகள் > 11ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகின

11ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகின

கொரோனா பாதிப்பு காரணமாக தமிழகத்தில் நடைபெற்று முடிந்த 11ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது. முன்னதாக 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் இன்று 11ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. 12ம் வகுப்பு மறுதேர்வு முடிவுகளும் இன்று வெளியாகியுள்ளன.

இன்று காலை 09.30 மணியளவில் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் இந்த ஆண்டில் 96.04% மாணவ, மாணவிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர். இதில் மாணவர்கள் 94.38% சதவீதம் பேரும், மாணவிகள் 97.49% பேரும் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

11ம் வகுப்பு தேர்வு முடிவுகளை மாணவர்கள்  http://tnresults.nic.in/,  http://dge1.tn.nic.inhttp://dge2.tn.nic.in என்ற தளத்தில் பார்க்கமுடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

You may also like
ரஜினிகாந்த் வருகையால் தமிழக அரசியலில் ஒன்றும் நடக்கப்போவதில்லை..!!!
அற்புதங்களின் குவியல் அண்ணா!
உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் தொடர்ந்து முதலிடம்
அம்மன் ஆலயம் கட்ட உதவும் ஒசூர் திமுக எம்எல்ஏ சத்யா!

Leave a Reply