சென்னையில் இன்று கொரோனா தொற்றால் ஒரே நாளில் 18 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். சென்னையில் கொரோனா தொற்று உறுதியான 1,00,877 பேரில் 12,436 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் கொரோனா தொற்றால் இதுவரை 2,140 பேர் உயிரிழந்துள்ளனர்.