Home > செய்திகள் > தமிழகத்தில் ஒரே நாளில் 1974 பேருக்கு பாதிப்பு: சுகாதாரத்துறை

தமிழகத்தில் ஒரே நாளில் 1974 பேருக்கு பாதிப்பு: சுகாதாரத்துறை

தமிழகத்தில் மேலும் 1974 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 44,691-ஆக உயர்ந்துள்ளதாக என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றை கட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்தியா முழுவதும் ஜூன் 30-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு உள்ளது. ஆனாலும், கொரோனா தொற்று அறிகுறியுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்களுக்கு அடுத்தடுத்து நோய்த்தொற்று உறுதி செய்யப்படுவதால் கடந்த சில நாட்களாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,08,993-லிருந்து 3,20,922-ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8,884-லிருந்து 9,195-ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் கொரோனாவால் குணமடைந்தோர் எண்ணிக்கை 1,54,330-லிருந்து 1,62,379-ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் 24 மணி நேரத்தில் 311 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 11,929 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனாவால் புதிதாக 1,974 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக கூறியதாவது; * தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இதுவரை 24,547 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்த 1138 பேர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். * தமிழகத்தில் கொரோனாவால் இன்று மேலும் 38 பேர் உயிரிழந்துள்ளனர். பலி எண்ணிக்கை 435-ஆக உயர்ந்துள்ளது. * சென்னையில் இன்று ஒரே நாளில் 1,415 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மொத்தம் 31,896 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். * இந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் மொத்தம் 79 மையங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தற்போது 19,676 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். * தமிழகத்தில் இதுவரை 7,10,599 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. * பிற மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வந்த 23 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. * தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு விகிதம் 0.97% ஆக உள்ளது. * மகாராஷ்டிராவில் இருந்து திரும்புவோருக்கு சோதனை சாவடிகளிலேயே கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. * அனைத்து மாவட்டங்களிலும் பரிசோதனை அதிகமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதிக பரிசோதனைகள் மேற்கொள்வது நல்லது என மருத்துவக்குழுவினர் தெரிவித்துள்ளனர். * தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு குணமடைந்து வருபவர்களின் விகிதம் 54.96% ஆக உள்ளது. * தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 18,782 பேரின் சளி மாதிரிகள் பரிசோதித்ததில் 1974 பேருக்கு தொற்று உறுதியானது. * இதுவரை தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 27,520 ஆண்கள், 17,124 பெண்கள், 17 திருநங்கைக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply