Home > செய்திகள் > 2021 பிப்ரவரி மாதத்தில் வரும் அதிசயம்

2021 பிப்ரவரி மாதத்தில் வரும் அதிசயம்

2021 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் அனைத்து கிழமைகளும் தலா 4 நாட்கள் வருவது அதிசய நிகழ்வாக பார்க்கப்படுகிறது. வாரத்தின் 7 நாட்களும் ஒவ்வொரு தினத்திற்கும் உரிய ஏழு கிரகங்களால் ஆளப்படுவதாக வான் ஜோதிடத்தில் நம்பப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் ஞாயிற்றுக்கிழமை, திங்கட்கிழமை, செவ்வாய்க்கிழமை, புதன்கிழமை, வியாழக்கிழமை, வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமை ஆகிய கிழமைகள் 4 முறையும், சில கிழமைகள் 5 நாட்களும் வருவது வழக்கம். ஆனால் 2021 புத்தாண்டில் வருகிற பிப்ரவரி மாதம் எப்போதும் இல்லாதபடி ஒரு அதிசயமாக 7 கிழமைகளும் இந்த மாதத்தில் தலா 4 நாட்கள் வீதம் வருகிறது. இந்த மாதத்தில் எந்த கிழமையும் 5 நாட்கள் வரவில்லை. வழக்கத்தை விட வித்தியாசமான முறையில் அனைத்து நாட்களும் தலா 4 நாட்கள் வருவதால் இதனை ஒரு அதிசய மாதமாக ஜோதிட ரீதியாகவும், நிபுணர்களாலும் பார்க்கப்படுகிறது.

Leave a Reply