Home > அரசியல் > உயிரோவியமாய் நடைபயணத் துயரங்கள்!

உயிரோவியமாய் நடைபயணத் துயரங்கள்!

21 நாட்கள் ஊரடங்கு அறிவிப்பைத் தொடர்ந்து வாகனப்போக்குவரத்து இல்லாமல், நூற்றுக்கணக்கான கிலோமீட்டர்கள் பிள்ளைகுட்டிகளோடும், மூட்டை முடிச்சுகளோடும் புலம்பெயர் மாநில தொழிலாளர்கள் பயணம் மேற்கொண்டுள்ளனர். அவர்களுடைய துயரத்தை சுனில் அபிமான் அவச்சார் என்ற ஓவியர் உயிரோவியமாக  வரைந்துள்ளார்.  இவர் கவிஞரும், கல்வியாளரும் ஆவார்.

இதயத்தை பிசையும் இந்த கொடூரமான பயணத்தை பல்வேறு மீடியாக்களும் செய்திகளாக பதிவுசெய்துள்ளன. இந்த பயணத்தில் இருப்பவர்களின் வாழ்வாதாரத்தை ஊரடங்கு சாப்பிட்டுவிட்டது. அவர்களுடைய தங்குமிடத்தை பறித்துக்கொண்டது.

தலித் வகுப்பைச் சேர்ந்த கவிஞரும் ஓவியருமான அவச்சார், மும்பை பல்கலைக்கழகத்தில் மராத்தி பேராசிரியராக பணிபுரிகிறார். ஏராளமான கவிதை நூல்களை வெளியிட்டுள்ள இவர், மக்களுடைய துயரம் தோய்ந்த இந்த பயணத்தை அடிப்படையாக வைத்து கருப்பு வெள்ளையில் இதுவரை 60 ஓவியங்களை தீட்டியுள்ளார்.

ஊரடங்கு தொடங்கியதில் இருந்து மக்களுடைய நொறுங்கிப்போன வாழ்க்கையை பார்த்து எனது மனநிலையை ஓவியங்களாகவும் கவிதைகளாகவும் பதிவு செய்துவருகிறேன் என்கிறார் அவச்சார்.

You may also like
ஒரே நேரத்தில் நாடு முழுவதும் தேர்தல் என்கிறாரே மோடி. ஏன்?
நரேந்திரமோடி வெளிநாடு செல்லாத 2020
மு.க. அழகிரியை பிடிக்கத்தான் அமித்ஷா வர்றாரா?
தமிழகத்தில் அக்.31 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு

Leave a Reply