Home > செய்திகள் > 3 வேளாண் சட்டங்களையும் ரத்து செய்ய வலியுறுத்தி நாடு முழுவதும் இன்று (பாரத் பந்த்)

3 வேளாண் சட்டங்களையும் ரத்து செய்ய வலியுறுத்தி நாடு முழுவதும் இன்று (பாரத் பந்த்)

மத்திய அரசின் விவசாய சட்டங்களை எதிர்த்தும், அதனை திரும்பப் பெறக்கோரியும் இன்று பாரத் பந்த் நடைபெறுகிறது. வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி தலைநகர் டெல்லியில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக பஞ்சாப், அரியானா மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் பெருமளவில் திரண்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

ஆனால் வேளாண் சட்டங்களை நீக்க வாய்ப்பில்லை என்றும், அதில் திருத்தங்கள் வேண்டுமானால் செய்ய தயாராக இருப்பதாகவும் மத்திய அரசு தொடர்ந்து கூறி வருகிறது. இதனால் இதுவரை நடந்த 5 சுற்று பேச்சுவார்த்தைகளிலும் சுமுக உடன்பாடு எட்டப்படவில்லை.

இதற்கிடையில் 3 வேளாண் சட்டங்களையும் ரத்து செய்ய வலியுறுத்தி நாடு முழுவதும் இன்று முழு அடைப்பு போராட்டத்தை (பாரத் பந்த்) டெல்லியில் போராடி வரும் விவசாயிகள் அறிவித்தனர்.

விவசாயிகளின் முழு அடைப்பு போராட்டத்துக்கு காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், ராஷ்டிரீய ஜனதா தளம், சமாஜ்வாடி, சிவசேனா உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆதரவு அளித்துள்ளன.

தமிழகத்தில் தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்திருக்கின்றன.

முசிறியில் விவசாயிகளுக்கு ஆதரவாகப் போராட்டத்தில் ஈடுபட்ட 58 பேர் கைது

விவசாயிகளுக்கு ஆதரவாகத் திருச்சி மாவட்டம் முசிறி கைகாட்டியில் திமுக ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன், கம்யூனிஸ்ட் ஒன்றிய செயலாளர் நல்லுசாமி, காங்கிரஸ் வட்டாரத் தலைவர் சுரேஷ், தமிழ் மாநில காங்கிரஸ் வட்டார தலைவர் நரேந்திரன் உள்ளிட்டோர் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மறியலில் ஈடுபட்டவர்களில் 58 பேரை முசிறி போலீசார் கைது செய்து முசிறி தா.பேட்டை சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வைத்துள்ளனர்.

 புதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமி முன்னிலையில் போராட்டம்

மத்திய அரசின் வேளாண் மசோதாவுக்கு எதிராக விவசாய சங்கங்கள் நடத்தும் பாரத்பந்திற்கு ஆதரவாகப் புதுச்சேரியின் தெருக்களில் விவசாய சங்கங்கள் அணிவகுத்து நிற்கின்றன. புதுச்சேரி முதல்வர் வி நாராயணசாமியும் இதில் கலந்துகொண்டார்.

விவசாயிகளுக்கு ஆதரவாக சைதாப்பேட்டையில் சி.பி.எம் கட்சியினர் போராட்டம்

டெல்லியில் நடைபெறும் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக இன்று சைதாப்பேட்டையில் போராட்டத்தில் ஈடுபட்டனர் சி.பி.எம் கட்சியினர்.

You may also like
கல்மனம் கொண்ட மோடிக்கு காலம் பதில் சொல்லியே தீரும்!
விவசாயிகள் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும்!-
வேளாண் சட்டங்களை திரும்ப பெற மத்திய அரசு தயாராக இல்லை
விவசாயத்தை (யும்) கார்ப்பரேட்டுகளுக்கு தாரைவார்க்கும் மோடி அரசு

Leave a Reply