Home > செய்திகள் > 4.5 ஏக்கர் நெற்பயிரை அழித்த உத்தர பிரதேச விவசாயி..

4.5 ஏக்கர் நெற்பயிரை அழித்த உத்தர பிரதேச விவசாயி..

உத்தர பிரதேசத்தில், நியாயமான விலை கிடைக்காத விரக்தியில் அறுவடைக்கு தயாராக இருந்த 4.5 ஏக்கர் நெற்பயிரை விவசாயி அழித்த சம்பவம் பெரும் வேதனை மற்றும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உத்தர பிரதேசம் மாநிலம் லக்கிம்பூரை சேர்ந்தவர் சட்னம் சிங். விவசாயத்தை தொழிலாக மேற்கொண்டு வருகிறார். அவர் அண்மையில் தனது 4.5 ஏக்கர் விவசாய நிலத்தில் நெல் சாகுபடி செய்தார். நெற் பயிர்கள் நன்றாக வளர்ந்து அறுவடைக்கு தயாராக இருந்தது. அதனால் நெல்லுக்கு விலை பேசி விட்டால் அறுவடை பணிகளை தொடங்கி விடலாம் என்ற நினைப்பில் அதற்கான வேலையில் இறங்கினார்.

தான் உற்பத்தி செய்த விளைபொருளுக்கு (நெல்) நியாயமான விலை கிடைக்காது என்பதை அறிந்ததும் சட்னம் சிங் மிகுந்த மனவேதனை அடைந்தார். மேலும் நியாயமான விலை கிடைக்காத விரக்தியில் 4.5 ஏக்கர் நிலத்தில் அறுவடைக்கு தயாராக நின்ற நெற்பயிர்களை அவரே அழித்து விட்டார். இரவு பகல் பாராது உழைத்து சாகுபடி செய்த பயிரை அவரை அழித்தது பெரும் சோகம்.

நெற்பயிரை அழிக்கும் விவசாயி

இது குறித்து விவசாயி சட்னம் சிங் கூறுகையில், நான் 4.5 ஏக்கர் நெற்பயிர் பயிரிட்டேன். நியாயமான விலை கிடைக்காததால் அதை அழித்து விட்டேன். விவசாயிகள் ஏற்கனவே இழப்பை சந்தித்து வருகின்றனர். இந்த விவகாரத்தை மத்திய அரசு முன் எழுப்பினேன் என தெரிவித்தார். இந்த மாத தொடக்கத்தில் 41,084 விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையில் நெல் கொள்முதல் செய்வதற்காக ரூ.1,000 கோடிக்கு மேல் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

You may also like
உச்சநீதிமன்ற
மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்
கிசான் முறைகேடு; புதுக்கோட்டையில் ரூ.1.40 கோடி வசூல்
தடையை மீறி கிராம சபைக் கூட்டம்
திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் காஞ்சிபுரத்தில் ஆர்ப்பாட்டம்

Leave a Reply