Home > அரசியல் > 40000 சவப்பெட்டிகளை தயார் செய்யுங்கள் எனக்கூறி அழிவுக்குத் துணை போனார்கள்: டக்ளஸ்

40000 சவப்பெட்டிகளை தயார் செய்யுங்கள் எனக்கூறி அழிவுக்குத் துணை போனார்கள்: டக்ளஸ்

இறுதி கட்ட யுத்தம் நடைபெற்றபோது நாடாளுமன்றத்திலிருந்த போலி தமிழ் தேசியவாதிகள் புலிகள் அழிக்கப்பட வேண்டுமென்றே விரும்பியிருந்ததாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்றைய தினம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

பேரினவாத தீயிற்கு எண்ணெய் வார்க்கின்ற செயற்பாடுகளை போலித் தமிழ் தேசியவாதிகள் குத்தகைக்கு எடுத்துள்ளனர்.

சில தரப்புக்களிடம் சலூன் கதவுகள் போன்று இருக்கும் பேரினவாதத்தினை திறக்கச் செய்வதால் எமது மக்களே பாதிக்கப்படுகின்றனர்.

இறுதி யுத்தத்தின் போது யார் யார் எங்கிருந்தார்கள் என்பதை பற்றி இப்போது அறிக்கை பட்டிமன்றம் நடத்தப்பட்டு கொண்டிருக்கிறது.

அந்த அழிவு ஏற்படக் கூடாது என்ற எனது மனிதாபிமான நோக்கு காரணமாக அதனை நிறுத்துவதற்கு அப்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடன் பேசுவோம் வாருங்கள் என அப்போது நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தியவர்களை அழைத்த போது அவர்கள் அதற்கு இணங்கியிருக்கவில்லை.

புலிகள் அழிய வேண்டும் என்ற மனநிலையிலேயே இருந்தார்கள். ஆனால் அதை வெளிப்படையாகக் காட்டாமல் புலிகள் நின்றடிப்பார்கள், விட்டடிப்பார்கள் – 40000 சவப்பெட்டிகளை தயார் செய்யுங்கள் என்றெல்லாம் கதைவிட்டுக் கொண்டு அழிவுக்கு துணை போனார்கள் என குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply