Home > செய்திகள் > 50 ஆண்டுக்கு பிறகு ஒரு அதிசயம்

50 ஆண்டுக்கு பிறகு ஒரு அதிசயம்

1971-ஆம் ஆண்டு, 2021 ஆம் ஆண்டு காலண்டர் ஒரே மாதிரி அமைந்துள்ளது தற்போது வைரலாகி வருகிறது.

50 ஆண்டுகளுக்கு முன்பு உள்ள 1971-ஆம் ஆண்டு காலண்டரும் 2021 ஆம் ஆண்டு காலண்டரும் ஒரே மாதிரி அமைந்துள்ளது.

இரு ஆண்டுகளின் நாள்களும் தேதிகளும் ஒரே மாதிரி இருக்கின்றன.

அது போல் பண்டிகைகளும் ஒரே மாதிரி இருக்கின்றன. அன்றைய ஆண்டில் என்னென்ன நன்மைகள் நடந்துள்ளன என்பதை மக்கள் இப்போதே கூகுளை புரட்ட தொடங்கிவிட்டனர்.

1971-ஆம் ஆண்டு இந்தியா- பாகிஸ்தான் வங்காள தேச விடுதலைப் போர் நடந்தது.

இதில் 90 ஆயிரம் கைதிகள் சரணடைந்தனர் எனத் தெரிகிறது.

இந்த ஆண்டு பாகிஸ்தான் இந்தியாவிடம் சரணடைந்ததாக கூறுகிறார்கள். எனவே பாகிஸ்தானிடமிருந்து வங்கதேசத்திற்கு விடுதலை கிடைத்தது போல் கொரோனாவிலிருந்து இந்த 2021 ஆம் ஆண்டில் விடுதலை கிடைக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

இதைப் பார்த்து 1971ல் பிறந்தவங்க எல்லாம் காலண்டரை தூக்கி விட்டு.. அதாவது காலரை தூக்கி விட்டுக் கொண்டு பெருமையுடன் வலம் வருகிறார்கள்!

Leave a Reply