Home > செய்திகள் > சென்னையில் இருந்து அரசு பேரூந்துகளில் பயணப்பட்ட 7000ம் பயணிகள்

சென்னையில் இருந்து அரசு பேரூந்துகளில் பயணப்பட்ட 7000ம் பயணிகள்

ஐந்துமாதங்களுக்குப் பிறகு மீண்டும் நேற்று பேருந்து சேவை தொடங்கிய நிலையில் சென்னையிலிருந்து மட்டும் தென் மாவட்டங்களுக்கு 7,000 பேர் பயணம் செய்துள்ளதாகப் போக்குவரத்து வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொரானா பாதிப்பு காரணமாகக் கடந்த 5 மாதங்களாகப் பேருந்துகள் இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. செப்டம்பர் 7ஆம் தேதி முதல் அரசு விரைவு பேருந்துகள் இயக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.

அதன்படி தமிழகத்தில் மாவட்டங்களுக்கு இடையேயான பேருந்து சேவை நேற்று தொடங்கியது. சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்கும் பிற மாவட்டங்களிலும் விரைவு பேருந்துகள் இயக்கப்பட்டன.

நேற்று அதிகாலை முதலே பேருந்துகள் இயக்கப்பட்ட நிலையில் கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு வந்த பயணிகளுக்கு உடல் வெப்ப பரிசோதனை செய்யப்பட்டது.

கைகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்ட பின்னரே பேருந்துகளில் பயணிக்க அனுமதிக்கப்பட்டனர்.

5 மாதங்களுக்குப் பிறகு பேருந்துகள் இயக்கப்படுவதால் நடைமேடைகளில் ஆங்காங்கே உதவி மையங்கள் ஏற்படுத்தப்பட்டு இருந்தன.

பேருந்துகளில் ஏறும் முன்பாக மீண்டும் ஒருமுறை தெர்மல் ஸ்கேனர் மூலம் வெப்ப பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

50 சதவிகித பயணிகளுடன் பேருந்துகள் இயக்கப்பட்டன. 44 பேர் அமரும் வசதி கொண்ட விரைவு பேருந்துகளில் 26 பயணிகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது.

பின்பக்க படிக்கட்டுகளில் ஏறி முன்பக்கமாக இறங்க அனுமதிக்கப்பட்டனர். சமூக இடைவெளியுடன் பயணிகள் அமர வைக்கப்பட்டனர்.

நடத்துநர் ஓட்டுநர்களுக்கும் வெப்ப பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

அதன்படி சென்னையிலிருந்து பிற ஊர்களுக்கு நேற்று 240க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்ட நிலையில் இதில் முன்பதிவு செய்த 4,500 பேரும், முன்பதிவு இன்றி 2500 பேரும் பயணித்தனர். வரும் காலங்களில் பயணிப்பதற்காக 13 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்துள்ளதாகப் போக்குவரத்து வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சென்னையைத் தொடர்ந்து கோவை, சேலம், திருச்சி, மதுரை, நெல்லை, நாகர்கோவில் என பிற பகுதிகளிலும் பேருந்துகள் நேற்று இயக்கப்பட்ட நிலையில் தென்மாவட்ட பேருந்துகளில் அதிக அளவு கூட்டங்களும் காணப்பட்டன.

ஐந்துமாதங்களாகப் பேருந்து வசதிகள் இல்லாததால் மக்கள் அதிக அளவு கார் வாடகை செலுத்தி பயணம் மேற்கொண்டு வந்த நிலையில் மீண்டும் மகிழ்ச்சியுடன் தற்போது பேருந்துகள் பயணம் மேற்கொண்டனர்.

You may also like
சூப்பர் கிங்ஸ் அணி அதிகாரப்பூர்வ வலைதளத்தில் இருந்து சுரேஷ் ரெய்னா, ஹர்பஜன் சிங் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் இன்று மேலும் 5,546 பேருக்கு கொரொனா உறுதி
வெப்பச்சலனம் காரணமாக 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
கோயம்பேடு சந்தை மீண்டும் திறப்பு

Leave a Reply