Home > செய்திகள் > 9 மாதங்களுக்கு பிறகு ஓடத்தொடங்கியது ஊட்டி மலை ரயில்

9 மாதங்களுக்கு பிறகு ஓடத்தொடங்கியது ஊட்டி மலை ரயில்

கொரோனா நோய் பரவல் காரணமாக, கடந்த 9 மாதங்களாக நிறுததப்பட்ட ஊட்டி மலை ரயில், தனியார் நிறுவனம் ஏற்பாட்டில் தற்போது சிறப்பு ரயிலாக இயக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நீலகிரியில் உள்ள சினிமா தியேட்டர்களைத் திறக்கவும், 7-ஆம் தேதி முதல் அனைத்து சுற்றுலா தலங்களையும் திறக்கவும் மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா உத்தரவிட்டார்.

இதனால், புகழ்பெற்ற மலை ரயில் இயக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்தது. இந்நிலையில், கோவை மாவட்டம், காரமடையைச் சேர்ந்த ஓர் தனியார் நிறுவனத்தின் சார்பில் மேட்டுப்பாளையம்-ஊட்டி இடையே சிறப்பு மலை ரயில் சேவைக்கு விண்ணப்பிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து இன்று, நாளை மற்றும் 12, 13 ஆகிய தேதிகளிலும் என 4 நாட்களுக்கு மலை ரயிலை இயக்கத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ஊட்டி மலை ரயில் இன்று காலை 7.30 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து புறப்பட்டது. இன்று நன்பகல் 2 மணியளவில், ஊட்டியில் இருந்து புறப்பட்டு மீண்டும், மாலை 6 மணிக்கு மேட்டுப்பாளையத்தை வந்தடைய உள்ளது.

You may also like
இந்தியாவின் சாபக்கேடு அதன் நீதிமன்றங்கள்!
ஆக்சிஜனில் ஆர்.எஸ்.எஸ். நடத்தும் பிரிவினை அரசியல்!
இரண்டு தவணை தடுப்பூசி போட்டாலும் கொரோனா தொற்று ஏற்படுவது ஏன்? மருத்துவரின் விளக்கம்!
ஆஸ்திரேலியாவை அலறவைத்த கொரோனா ஆடு!

Leave a Reply