Home > செய்திகள் > இன்று முதல் இவை எல்லாம் மாறியுள்ளன

இன்று முதல் இவை எல்லாம் மாறியுள்ளன

நாடு முழுவதும் வங்கிப் பரிவர்த்தனை, சமையல் எரிவாயு விலை உள்ளிட்ட பல்வேறு நடைமுறைகளில் டிசம்பர் 1-ஆம் தேதி முதல் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

வழக்கமாக, மாதந்தோறும் ஒன்றாம் தேதி சமையல் எரிவாயு விலை மாற்றியமைக்கப்பட்டுவது வழக்கம். அதன்படி, 14.2 கிலோ சிலிண்டர் எரிவாயுவின் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை. எனினும் டிசம்பர் 1 முதல், வணிக சிலிண்டரின் விலை ரூ.56 வரை உயர்த்தப்பட்டுள்ளது.

இணையத்தில் பணப்பரிமாற்றம் செய்ய உதவும் ஆர்டிஜிஎஸ் சேவையை, இன்றுமுதல் 24 மணி நேரமும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

எல்ஐசி காப்பீடு பிரீமியம் 5 ஆண்டுகள் செலுத்தி முடித்திருந்தால், அதன்பிறகு, ஒவ்வொரு பிரீமியத்திற்கும் 50 விழுக்காடு தொகையை மட்டும் செலுத்தி பாலிசியை தக்க வைத்துக் கொள்ளலாம் என்ற அறிவிப்பு இன்று முதல் நடைமுறைக்கு வருகின்றது.

You may also like
சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை திடீர் உயர்வு- அதிருப்தியில் மக்கள்

Leave a Reply