Home > செய்திகள் > கரு.நாகராஜனின் வழக்கை தள்ளுபடி செய்யுங்கள்

கரு.நாகராஜனின் வழக்கை தள்ளுபடி செய்யுங்கள்

நீட் தேர்வின் பாதிப்பை ஆராயும் குழுவுக்கு தடை விதிக்குமாறு பாஜக தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்யக்கோரி மாணவி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார்.

தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்ய அனைத்து கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் தமிழக அரசு அதன் பாதிப்பு குறித்து ஆராய ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான 9 பேர் கொண்ட குழுவை நியமித்துள்ளது. அக்குழு நீட் தேர்வால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்களின் கருத்துக்களை கேட்டு ஆலோசனைகளை நடத்தி வருகிறது. நீட் தேர்வுக்கு எதிராக தமிழக அரசு குழு அமைத்ததற்கு கடும் எதிர்ப்பு பாஜக நீதிமன்றத்தை நாடியது.

பாஜக கரு.நாகராஜனின் வழக்கை தள்ளுபடி செய்யுங்கள் : மாணவி மனு!

தமிழக பாஜக பொதுச்செயலாளர் கரு.நாகராஜன் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், நாடாளுமன்றம் நிறைவேற்றிய சட்டத்திற்கு எதிராக மாநில அரசு செயல்பட முடியாது.

மத்திய அரசை எதிர்க்கும் வகையில் தமிழக அரசு குழு அமைத்துள்ளது. அதற்கு தடை விதிக்க வேண்டும் என கோரியிருந்தார். நீட் தேர்வில் இருந்து தமிழகம் விலக்கு பெறும் என திமுக அரசு நம்பிக்கையை ஏற்படுத்தி இருக்கும் சூழலில் பாஜக இந்த வழக்கை தொடர்ந்தது மாணவர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

பாஜக கரு.நாகராஜனின் வழக்கை தள்ளுபடி செய்யுங்கள் : மாணவி மனு!

இந்த நிலையில், கரு.நாகராஜன் வழக்கை எதிர்த்து நந்தினி என்னும் மாணவி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில், மாணவர்களின் பிரச்னைகளில் அரசியல்வாதிகளுக்கு இடமில்லை.

மாணவர்களின் நிலைமையை கருத்தில் கொண்டு அரசு இந்த குழுவை அமைத்துள்ளது. எனவே கரு,நாகராஜன் வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என கோரியுள்ளார்.

பாஜக கரு.நாகராஜன் தொடர்ந்த வழக்கு வரும் திங்கட்கிழமை விசாரிக்கப்பட உள்ள நிலையில் அதனுடன் சேர்த்து மாணவியின் வழக்கை நீதிமன்றம் விசாரிக்கவுள்ளது.

Leave a Reply