Home > செய்திகள் > வீட்டுக்குள் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சடலங்கள்: நடந்தது என்ன?

வீட்டுக்குள் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சடலங்கள்: நடந்தது என்ன?

கனடாவில் உள்ள ஓரு வீட்டில் ஆண் மற்றும் பெண் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளனர்.

கனடாவில் உள்ள ஹால்டனில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. அங்குள்ள வீட்டில் ஆண் மற்றும் பெண் பேச்சுமூச்சின்றி கிடப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதை தொடர்ந்து சம்பவ இடத்துக்கு போலீஸார் சென்றனர்.

அதன்படி ப்ரோண்டி தெரு பகுதியில் உள்ள வீட்டை அவர்கள் அடைந்தனர். அங்கு ஆண் மற்றும் பெண் பேச்சு மூச்சின்றி கிடந்த நிலையில் அவர்களை பரிசோதித்த போது இருவரும் இறந்துவிட்டது தெரியவந்தது.

இது தொடர்பில் யார் மீதும் சந்தேகம் இல்லை என போலீஸார் தெரிவித்துள்ளனர். இருவரும் எப்படி இறந்தார்கள் மற்றும் அவர்களின் விபரங்கள் குறித்து எந்தவொரு தகவலும் இன்னும் வெளியிடப்படவில்லை.

You may also like
சித்ரா மரணத்தில் காவல்துறை சந்தேக வளையத்தில் சட்டமன்ற உறுப்பினர்
இலங்கையில் கொரோனாவால் உயிரிழந்த குழந்தையின் சடலத்தை ஏற்க மறுக்கும் பெற்றோர்
பைக்கில் சென்ற தாய், மகள் உயிரிழப்பு: மழைநீர் வடிகால்வாயை மூடுமாறு வலியுறுத்தும் ஸ்டாலின்
சின்னத்திரை நடிகை சித்ரா தூக்கிட்டு தற்கொலை

Leave a Reply