Home > செய்திகள் > சிபிஎஸ்இ தேர்வுகள் ஆன்லைன் வழியாக நடத்தப்படாது- அதிகாரி தகவல்

சிபிஎஸ்இ தேர்வுகள் ஆன்லைன் வழியாக நடத்தப்படாது- அதிகாரி தகவல்

கொரோனா நோய் தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் நாடு முழுவதும் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டதால் பள்ளிகள் மூடப்பட்டன.

எனவே, மாணவர்கள் தேர்வு எழுத முடியாத நிலை ஏற்பட்டது. இந்நிலையில், சிபிஎஸ்இ தேர்வுகள் எப்போது நடைபெறும் என்ற கேள்வியும், அது எழுத்துத்தேர்வாக நடத்தப்படுமா அல்லது ஆன்லைன் வழியாக நடைபெறுமா என்ற கேள்வியும் எழுந்தன.

இது குறித்து சிபிஎஸ்இ மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், சிபிஎஸ்இ தேர்வுகள் ஆன்லைன் வழியாக நடத்தப்படாது என்றும் எழுத்துத் தேர்வாகத்தான் நடத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

எனினும், இந்த தேர்வு நடைபெறும் தேதிகள் குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ள, அவர், இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அனைவருடனும் ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாக கூறியுள்ளார்.

கொரோனா வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்றி தேர்வு நடித்தப்படும் என்றும், மாணவர்கள் எழுத்துத் தேர்வுக்குமுன்னர், செய்முறைப்பயிற்சி தேர்வில் பங்கேற்கமுடியாத நிலை ஏற்பட்டால், அதற்கான மாற்றுவழிகள் கண்டறியப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், அடுத்த ஆண்டு சிபிஎஸ்இ தேர்வு மற்றும் போட்டித் தேர்வுகள் நடத்துவது குறித்து, மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுடன் வருகிற 10-ஆம் தேதி விவாதிப்பார் என்ற தகவல் வெளியாகி இருக்கின்றது.

You may also like
புதிய கல்விக் கொள்கையில் மும்மொழி கொள்கை அறிமுகம்: மத்திய அரசு
சிபிஎஸ்இ 10,+2 பொதுத்தேர்வு முடிவுகள் ஆகஸ்ட் 15 ல் வெளியீடு

Leave a Reply