Home > செய்திகள் > ஒடிசா உள்ளிட்ட 6 மாநிலங்களில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு

ஒடிசா உள்ளிட்ட 6 மாநிலங்களில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு

வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுபெற்றதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஆனால் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியால் தமிழகத்திற்கு மழை வாய்ப்பு மிகக் குறைவு என்றும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வடக்கு, வடமேற்கில் நகர்ந்து ஒடிசா, மேற்கு வங்கம் இடையே கரையை கடக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் ஒடிசா, மேற்கு வங்கம், ஜார்கண்ட், சத்தீஸ்கர், வடக்கு மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் வரும் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

இதனிடையே தமிழகத்தில் தென் மேற்கு பருவ மழை பரவலாக பெய்து வருகிறது. குறிப்பாக வெப்ப சலனத்தால் மழை பெய்கிறது. தமிழகத்தில் நிலவும் வெப்பம் காரணமாக வளி மண்டல மேல் அடுக்கில் காற்று சுழற்சி ஏற்பட்டுள்ளது.

இதனால் தேனி, திண்டுக்கல், மதுரை, விருது நகர், கரூர், திருச்சி, பெரம்பலூர், சேலம், தர்மபுரி, நாமக்கல், கிருஷ்ணகிரி, வேலூர், ராணிப் பேட்டை, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் இன்று லேசானது முதல் மிதமான மழையும் சில இடங்களில் இடியுடன் கூடிய மழையும் பெய்யும்.

தமிழகத்தில் அதிகபட்சமாக கடந்த 24 மணி நேரத்தில் தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறில் 7 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.வானமாதேவி பகுதியில் 5 செமீ மழையும்,சோழவந்தான், திருக்கழுக்குன்றம், வாடிப்பட்டி, ஆண்டிபட்டி ஆகிய பகுதியில் தலா 4 செ.மீ.மழையும் பதிவாகி உள்ளது.

You may also like
பிறந்தநாள் அன்று அக்காவை நினைத்து உருகிய திருமா!
பாலசுப்ரமணிக்காக உருகிய இளையராஜா
சுதந்திர தினத்தில் படப்பிடிப்புக்கு அனுமதி அறிவிப்பு வெளியிட முதல்வருக்கு பாரதிராஜா வேண்டுகோள்
மத்திய அரசு மீது ராகுல் காந்தி விமர்சனம்

Leave a Reply