Home > செய்திகள் > ‘சென்னை 6 மாவட்டங்களாக பிரிப்பு’

‘சென்னை 6 மாவட்டங்களாக பிரிப்பு’

சென்னையில் புதிதாக மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக அதிமுக தலைமை அறிக்கை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில், “அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக நிர்வாக வசதியை கருத்தில் கொண்டும், கழகப் பணிகளை விரைவு படுத்தும் வகையிலும், கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் வட சென்னை தெற்கு, தென் சென்னை வடக்கு, சென்னை தெற்கு ஆகிய மாவட்டங்கள் கீழ்கண்டவாறு புதிய மாவட்டங்களாக பிரிக்கப்பட்டு பின்வருமாறு சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கி செயல்படும் என்பதையும் மாவட்ட செயலாளர்களாக கீழ்க் கண்டவர்கள் கீழ்க்காணும் மாவட்டங்களுக்கு இன்று முதல் நியமிக்கப் படுகிறார்கள் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

  1. வட சென்னை தெற்கு (கிழக்கு): ராயபுரம், திருவிக நகர்- டி ஜெயக்குமார் (மாவட்ட செயலாளர்)
  2. வட சென்னை தெற்கு (மேற்கு): எழும்பூர், துறைமுகம்- நா.பாலகங்கா
  3. தென் சென்னை வடக்கு (கிழக்கு): சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, ஆயிரம் விளக்கு- ஆதிராஜாராம்
  4. தென் சென்னை வடக்கு (மேற்கு): தியாகராயநகர், அண்ணாநகர்- தி நகர். சத்யா எம்எல்ஏ
  5. தென் சென்னை தெற்கு (கிழக்கு): மயிலாப்பூர், வேளச்சேரி- எம் கே அசோக்
  6. தென் சென்னை தெற்கு (மேற்கு): விருகம்பாக்கம், சைதாப்பேட்டை- விருகை ரவி எம்எல்ஏ

கழகம் மற்றும் சார்பு அமைப்புகளுக்கு திருத்தி அமைக்கப்பட்ட நிர்வாகிகள் நியமனம் செய்யப்படும் வரை, தற்போதைய நிர்வாகிகள் சம்பந்தப்பட்ட மாவட்டங்களுக்கு உட்பட்ட நிர்வாகப் பொறுப்புகளில் தொடர்ந்து செயலாற்றுவார்கள் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.” என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெய குமாருக்கு மாவட்ட செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

You may also like
கொசஸ்தலை ஆறு கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க, ஆட்சியர் அறிவுறுத்தல்
சென்னை காசிமேட்டில் கடும் கடல்சீற்றம் : அச்சத்தில் மக்கள்!
சென்னை காசிமேட்டில் கடும் கடல்சீற்றம்
ஐ.எஸ்.எல். கால்பந்து : சென்னை அணி வெற்றி
ஐ.எஸ்.எல். கால்பந்து : சென்னை அணி வெற்றி
செம்பரம்பாக்கம் ஏரி
செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் திறக்கப்படுமா?

Leave a Reply