தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் நேற்று முதல் திறக்கப்பட்ட நிலையில் நேற்று ஒரே நாளில் 150 கோடிக்கும் அதிகமாக டாஸ்மாக்கில் மது விற்பனையானது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சென்னை உயர்நீதிமன்றம் டாஸ்மாக் கடைகளை திறக்க ஒரு சில நிபந்தனைகளை விதித்து இருந்தது. அதில் குறிப்பாக சமூக விலகலை மது வாங்க வருபவர்கள் பின்பற்ற வேண்டும் என்று கண்டிப்பாக தெரிவித்து இருந்தது.
ஆனால் தமிழகத்தில் உள்ள பெரும்பாலான டாஸ்மாக் கடைகளிலும் சமூக விலகலை பின்பற்றவில்லை என்பது சமூக வலைத்தளங்களில் வெளியான வீடியோக்களில் இருந்து தெரிய வந்தது. இந்த நிலையில் அதிரடியாக சற்று முன் சென்னை உயர்நீதிமன்றம் ஒரு சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளது
இந்த உத்தரவின்படி ஊரடங்கு முடியும் வரை தமிழகத்தில் மதுக்கடைகளை மூடவேண்டும் என்றும் ஆன்லைனில் மட்டுமே மதுக்களை விற்பனை செய்ய வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றம் விதித்த நிபந்தனைகள் மீறப்பட்டதால் இந்த அதிரடி உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த உத்தரவால் டாஸ்மாக்கை மூட வேண்டும் என்று போராடிய அரசியல் கட்சிகளுக்கும், சமூக நல ஆர்வலர்களுக்கும் கிடைத்த வெற்றியாக கருதப்படுகிறது
You can also catch all the latest Tamil News by following us on Facebook