Home > செய்திகள் > விவசாயிகளிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் முதல்வர் எடப்பாடி- மு.க.ஸ்டாலின்

விவசாயிகளிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் முதல்வர் எடப்பாடி- மு.க.ஸ்டாலின்

வேளாண் சட்டத்தை ஆதரித்ததற்காக விவசாயிகளிடம் முதல்வர் மன்னிப்பு கேட்க வேண்டுமென ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

மக்களவையில் நிறைவேற்றப்பட்ட வேளாண் மசோதாக்களை மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் நேற்றுமாநிலங்களவையில் அறிமுகப்படுத்தினார். எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி மசோதா மீது குரல் வாக்கெடுப்பு நடத்தி நிறைவேறியதாக அறிவித்தார் துணைத் தலைவர் ஹரிவன்ஸ்.

முன்னதாக  இந்தச் சட்டத்தை ஆதரித்து நீீீீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. அதில், தமிழக விவசாயிகளுக்கு நன்மைபயக்கும் வகையில் வேளாண்திட்டங்கள் உள்ளன. வேளாண் சட்டங்களால் விவசாயிகள், கொள்முதல் செய்வோர் என இருவர் நலனும் பாதுகாக்கப்படும் என்றெல்லாம் தெரிவித்திருந்தார். எனினும், மக்களவையில் இச்சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த அதிமுக, மாநிலங்களவையில் எதிர்ப்பு தெரிவித்தது.

இதுதொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் நேற்று(செப்டம்பர் 20) வெளியிட்ட அறிக்கையில், “விவசாயிகளுக்கு எதிரான மூன்று சட்டங்களுக்கும், விருப்பத்துடன் முன்வந்து ஆதரவு அளித்து விட்டு அதனால் பாதிப்பு ஏதுமில்லை என்று கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும், மத்திய பாஜக அரசுக்கும், களிப்பு பொங்க வக்காலத்து வாங்கி இருப்பதுதான், முதலமைச்சர் பழனிசாமியால் இதுவரை மக்களுக்கு உருவான பல்வேறு மோசமான நிகழ்வுகளிலேயே, மிகவும் மோசமானது” என்று சாடினார்.

முதலமைச்சரின்  வக்காலத்து அறிக்கைக்குப் பின்னர், அதே கட்சியின் மாநிலங்களவை உறுப்பினரான மூத்த அரசியல் தலைவர் எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம்,  3 மசோதாக்களையும் கடுமையாக எதிர்த்துப் பேசியுள்ளார் என சுட்டிக்காட்டிய ஸ்டாலின்,

“மக்களவையில் ஆதரவு, மாநிலங்களவையில் எதிர்ப்பு என்ற இந்த நகைச்சுவைக்குப் பின்னர், பதவியைக் காத்துக் கொள்ளவும், ஊழல் புகார்களில் இருந்து தப்பிக்கவும் உங்களைப் பலிபீடத்தில் ஏற்றப் பார்த்தேன் என ‘ஒப்புதல் வாக்குமூலம் அளித்து விவசாயிகளிடம் மன்னிப்புக் கோருவது மட்டும்தான் பழனிசாமிக்கு இருக்கும் ஒரே வழி” என்று விமர்சித்துள்ளார்

You may also like
நீட் தேர்வு குறித்து ஸ்டாலின் அறிக்கை
தாயார் தவுசாயம்மாள் மறைவு : முதல்வருக்கு நேரில் ஆறுதல் கூறுகிறார் மு.க.ஸ்டாலின்
“வேலைவாய்ப்பை உருவாக்கும் திட்டங்கள் தேவை” – மு.க ஸ்டாலின்
அண்ணா பல்கலைக்கழக
உதயநிதி ஸ்டாலின் தலைமையில் போராட்டம்..

Leave a Reply