Home > செய்திகள் > செம்மொழி தமிழாய்வு நிறுவன இயக்குனருக்கு கொரியா தமிழ்ச்சங்கம் வாழ்த்து!

செம்மொழி தமிழாய்வு நிறுவன இயக்குனருக்கு கொரியா தமிழ்ச்சங்கம் வாழ்த்து!

செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்திற்கு இயக்குனர் இல்லாமல் இருந்த நிலையில் உலகத்தமிழர்களோடு நெருங்கிய தொடர்பில் இருக்கும் பேராசிரியர் இரா. சந்திரசேகரன் அவர்கள் அப்பொறுப்பிற்கு பணியமர்த்தப்ப்பட்டிருப்பது பெருமகிழ்ச்சியளிக்கிறது என்று கொரியா தமிழ்ச்சங்கத் தலைவர் ராமசுந்தரம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பது… “செப்புமொழி பதினெட்டுடையாள் எனினும் சிந்தனை ஒன்றுடையாள்” என்று உலகமே வியந்து பார்க்கும் அளவில் இந்திய திருநாட்டை நிலையாக கட்டிக்காக்கும் “வேற்றுமையில் ஒற்றுமை” என்ற தத்துவத்தை ஒற்றை வரியில் பாடினார் நம் மகாகவி பாரதி. அவ்வண்ணமே நம் நாட்டில் கூட்டாட்சி மற்றும் மொழியுரிமை ஆகியவை நிலைபெற்று விளங்க தமிழ்நாடு என்றும் முன்னோடியாய் இருந்து வருகிறது! தமிழ்நாட்டின் மொழி மற்றும் அரசியல் ஆளுமைகளின் நீண்டகால கோரிக்கைக்கமைவாக 2004-ம் ஆண்டு இந்தியாவின் முதல் செம்மொழியாக தமிழ் அறிவிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து கிரந்தம் (2005), தெலுங்கு (2008) கன்னடம் (2008), மலையாளம் (2013), மற்றும் ஓடியா (2014) ஆகிய மொழிகள் செம்மொழியாயின என்பது வரலாறு. ஆயினும் 2006-இல் தொடங்கப்பட்ட செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்திற்கு இயக்குனர் இல்லாமல் இருந்த நிலையில் உலகத்தமிழர்களோடு நெருங்கிய தொடர்பில் இருக்கும் பேராசிரியர் இரா. சந்திரசேகரன் அவர்கள் அப்பொறுப்பிற்கு பணியமர்த்தப்ப்பட்டிருப்பது பெருமகிழ்ச்சியளிக்கிறது! இந்த மகிழ்ச்சியை தமிழ்கூறும் நல்லுலகெங்கும் காணமுடிகிறது. புதிய இயக்குனருக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகளையும், இதுகாறும் செயலாற்றிய மாண்புமிகு பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மாண்புமிகு மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் இரமேஷ் பொக்கிரியால் ஆகியோருக்கு நெஞ்சார்ந்த நன்றிகளையும் தெரிவித்துக்கொள்வதில் கொரியா தமிழ்ச் சங்கம் பெருமகிழ்ச்சியடைகிறது. புதிய இயக்குனர் அவர்கள் நிறுவனத்தின் அமைப்பு மற்றும் ஆட்புல வளங்களை நிலைப்படுத்தி தமிழாய்வுப்பணிகளை மேலும் ஊக்குவித்து விரைவில் ஒரு முன்னணி மொழி ஆராய்ச்சி நிறுவனமாக விளங்கச்செய்வார் என்பதில் ஐயமில்லை! எமது சங்கத்தால் ஒருங்கிணைக்கப்பட்ட தமிழ் கலை இலக்கிய சந்திப்பு 2019 நிகழ்வில் சிறப்புரையாற்றியபொழுது ஒரு ஏழைத்தாயின மகனாகப் பிறந்து அமெரிக்க தேசத்தின் அதிபரே தன்னுடைய தேர்தல் வெற்றிக்கு எதிர்பார்க்கும் ஒரு மிகப்பெரிய ஆளூமையாக உருவெடுத்திருக்கும் மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்திற்கு ஒரு இயக்குனரை நியமித்து போதிய பொருண்மிய உதவிகளையும் வழங்குவார் என்று எதிர்பார்ப்பதாக தெரிவித்திருந்தேன் என்பது இங்கு நினைவுகூறத்தக்கது. அந்த நிகழ்வில் இங்கு சியோலில் உள்ள இந்திய தூதரகத்தின் தொழில்துறை செயலர் சிறப்பு விருத்தினராக கலந்துகொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

You may also like
கொரிய தமிழ்ச்சங்க பொங்கல் விழாவுக்கு, கவிஞர் வைரமுத்து, நக்கீரன் கோபால் வாழ்த்து!
கொரியா தமிழ்ச் சங்கத்தின் தமிழ் புத்தாண்டு விழா!
கொரியாவாழ் தமிழரின் கவிதை நூல் வெளியீட்டு விழா
கொரிய தமிழ்ச் சங்கத்தின் தமிழர் திருநாள் விழாவில் சங்கத் தலைவர் உரை

Leave a Reply