Home > செய்திகள் > உலகை அச்சுறுத்தும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 40 லட்சத்தை தாண்டியது

உலகை அச்சுறுத்தும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 40 லட்சத்தை தாண்டியது

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப் பட்டது. தற்போது உலகில் 210 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த கொடிய வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் விஞ்ஞானிகள் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். ஆனாலும், கொரோனாவின் தாக்கமும் அதனால் ஏற்படும் உயிரிழப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 40 லட்சத்தை தாண்டியுள்ளது. வைரஸ் பரவி சிகிச்சை பெறுபவர்களில் 48 ஆயிரத்து 650-க்கும் மேற்பட்டோரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 13 லட்சத்து 76 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். ஆனாலும், இந்த கொடிய வைரசுக்கு 2 லட்சத்து 75 ஆயிரத்து 700க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

You may also like
பிரிட்டனில் 18 லட்சத்தை தாண்டியது- கொரோனா
இலங்கையில் கொரோனாவால் உயிரிழந்த குழந்தையின் சடலத்தை ஏற்க மறுக்கும் பெற்றோர்
கொரோனாத் தொற்று தடுப்பூசி போட்ட நால்வருக்கு பிரச்சினை?
குளிரை சமாளிக்க முடியாமல் சீன வீரர்கள் தவித்து வருகின்றனர்

Leave a Reply