Home > செய்திகள் > தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1242 ஆக அதிகரித்துள்ளது – அமைச்சர் விஜயபாஸ்கர்

தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1242 ஆக அதிகரித்துள்ளது – அமைச்சர் விஜயபாஸ்கர்

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள போதிலும், தொடர்ந்து கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது.

இதற்கிடையே, தமிழக அரசு நேற்று வெளியிட்ட தகவலின்படி, தமிழகத்தில் கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 1204 ஆக இருந்தது. 

இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1242 ஆக அதிகரித்துள்ளது. இது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், தமிழகத்தில் கொரோனா வைரசால் இன்று மேலும் 38 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். இதையடுத்து கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1242 ஆக அதிகரித்துள்ளது.

You may also like
உள் ஒதுக்கீட்டின் மூலமாக 395 மாணவர்களுக்கு மருத்துவ இடம் – அமைச்சர் விஜயபாஸ்கர்
இந்தியாவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 17 லட்சத்தை நெருங்கியது
மருத்துவர்கள், செவிலியர்கள் என்று அனைவரும் சிறப்பாக பணியாற்றி வருகின்றனர் – விஜயபாஸ்கர்
இந்தியாவில் 8 லட்சத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு