Home > அரசியல் > ஸ்ரீபெரும்புதூர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ பழனிக்கு கொரோனா தொற்று உறுதி

ஸ்ரீபெரும்புதூர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ பழனிக்கு கொரோனா தொற்று உறுதி

அதிமுக எம்எல்ஏ-விற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுக்குள் கொண்டு வர பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு அடுத்தது நீட்டிக்கப்பட்டு, தற்போது நாடு முழுவதும் வருகிற ஜூன் 30ம் தேதி வரை முடக்கப்பட்டுள்ளது. அதேசமயம் பல்வேறு தளர்வுகளும் அளிக்கப்பட்டுள்ளன. எனினும், கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலக அளவில் கொரோனா பரவலில் இந்தியா 4வது இடத்தில் உள்ளது. இந்தியளவில் கொரோனா பாதிப்பில் தமிழகம் 2-வது இடத்தில் உள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 367 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 40,698 ஆக அதிகரித்துள்ளது. குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 22,047 ஆக அதிகரித்துள்ளது. இருப்பினும், கொரோனாவை கட்டுப்படுத்த அரசு போர்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில், ஸ்ரீபெரும்புதூர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ பழனிக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் அவருக்கு தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட அதிமுக எம்எல்ஏ சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நிவாரண பணிகளுக்கு வெளியே சென்றபோது கொரோனா பரவி இருக்கலாம் என்று தெரிவிக்கப்படுகிறது. இருப்பினும், எம்எல்ஏ-விற்கு கொரோனா வைரஸ் தாக்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

You may also like
இரண்டு தவணை தடுப்பூசி போட்டாலும் கொரோனா தொற்று ஏற்படுவது ஏன்? மருத்துவரின் விளக்கம்!
திமுகவுககு எதிரில் இருப்பது அதிமுக அல்ல ஆர்எஸ்எஸ் நச்சு!
என்னை நிம்மதியாக வாழவிடுங்கள்…கோயில் கோயிலாக அலைகிறேன்… என்று மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் சங்கரலிங்கத்தின் மனக்குமுறல்
அமித்ஷா சென்னை வருகை ரத்து – அதிமுகவினர் மிரட்சி!

Leave a Reply