Home > செய்திகள் > கனிமொழி இந்தியரா விசாரணைக்கு உத்தரவு

கனிமொழி இந்தியரா விசாரணைக்கு உத்தரவு

சென்னை விமான நிலையத்தில் திமுக மாநில மகளிரணி தலைவர் கனிமொழியை நீங்கள் இந்தியரா என்று கேட்ட விவகாரம் தொடர்பாக சிஐஎஸ்எஃப் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

சென்னையிலிருந்து டெல்லி போவதற்காக சென்னை விமான நிலையத்திற்கு திமுக மக்களவை குழு துணைத் தலைவர் கனிமொழிஆகஸ்ட் 9 அன்று சென்றார். அவரை “நீங்கள் இந்தியரா?” என்று அங்கு பணியிலிருந்த சிஐஎஸ்எஃப் பெண் அதிகாரி கேட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதுபற்றி கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில், “சிஐஎஸ்எஃப் பெண் அதிகாரியிடம், எனக்கு இந்தி தெரியாது. அதனால் நீங்கள் ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ பேச முடியுமா என்று கேட்டேன். அவர் என்னைப் பார்த்து, ‘நீங்கள் இந்தியரா” என்று கேள்வி எழுப்புகிறார். இந்தி தெரிந்தால்தான் இந்தியர் என்ற நிலை எப்போது உருவானது” என்று கேள்வி எழுப்பியிருந்தார். அத்துடன், இந்தித் திணிப்பு என்ற ஹாஷ்டேக்கையும் பதிவிட்டார்.

இதற்கு சமூக வலைதளங்களில் கடுமையான கண்டனம் எழுந்ததோடு, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது. இதற்கு பதில் தெரிவித்துள்ள மத்திய தொழிலக பாதுகாப்புப் படை, “இந்த விவகாரம் தொடர்பாக உரிய விசாரணை நடத்துவதற்கு சிஐஎஸ்எஃப் உத்தரவு பிறப்பித்துள்ளது. எந்தவொரு குறிப்பிட்ட மொழியையும் வலியுறுத்துவது சிஐஎஸ்எஃப்பின் கொள்கை அல்ல” என்று விளக்கம் அளித்துள்ளது.இதற்கு வரவேற்பு தெரிவித்த கனிமொழி, “உங்களது உடனடி பதிலுக்கும், நடவடிக்கை எடுப்பதற்கான உத்தரவாதத்திற்கும் என்னுடைய நன்றி” என்று கூறியுள்ளார்.

You may also like
வடக்கு மண்டலத்தில் அழகிரி – மு.க.ஸ்டாலின் கவனிப்பாரா?
கமலுக்கு வில்லனாகும் மலையாள நடிகர்
உழைப்போர் கையில் பொறுப்பு – திமுக தலைவருக்கு ஒரு வேண்டுகோள்!
விவசாயிகளுக்காகப் போராடும் இயக்கம்தான் திமுக- கனிமொழி

Leave a Reply