Home > அறிவியல் > சூப்பர் புயல் ‘அம்பன்’ மேற்குவங்கம் – வங்கதேசம் இடையே நாளை கரையை கடக்கிறது

சூப்பர் புயல் ‘அம்பன்’ மேற்குவங்கம் – வங்கதேசம் இடையே நாளை கரையை கடக்கிறது

அதிதீவிர புயலாக இருந்த ‘அம்பன்’ புயல், தற்போது சூப்பர் புயலாக மாறியுள்ளது. இது மத்திய மேற்கு வங்கக் கடல் மற்றும் அதை ஒட்டிய தெற்கு வங்கக் கடல் பகுதியில் மையம் கொண்டுள்ளது. மே 19ம் தேதி அதிகாலை 02.30 மணிநிலவரப்படி, உம்பன் புயல், ஒடிசாவின் தெற்கு பாரதீப் பகுதியிலிருந்து 570 கிமீ. தொலைவிலும், மேற்குவங்கம் திகாவின் தென்மேற்கு பகுதியிலிருந்து 720 கி.மீ. தொலைவிலும், வங்கதேசத்தின் கெபுபாராவின் தென்மேற்கு பகுதியிலிருந்து 840 கி.மீ. தொலைவிலும் மையம் கொண்டிருந்தது. ஒடிசா மாநிலத்தின் புரி, கொர்தா மாவட்டங்களில் மிகக்கன மழையும், மேற்குவங்க மாநிலத்தின் மெடினிபுர், தெற்கு மற்றும் வடக்கு 24 பரக்னாஸ் மாவட்டங்களில் கனமழையும் பெய்யும் என்று எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது. உம்பன்’ புயல், மே 20ம் தேதி, மேற்குவங்க மாநிலம் திகா மற்றும் வங்கதேசத்தின் ஹாதியா தீவுக்கு இடையே கரையை கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புயல் கரையை கடக்கும்போது காற்றின் வேகம் அதிகபட்சமாக மணிக்கு 195 கி.மீ வேகத்தில் வீசும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

You may also like
வேளாங்கண்ணி தேவாலய பிரார்த்தனையில் முதல்வர் பழனிசாமி பங்கேற்றார்.
மகாத்மா காந்தியை கொன்றவர்களிடம் மேற்கு வங்காளம் தலைவணங்காது- மம்த பானர்ஜி
புரெவி புயல் கரையை கடக்க உள்ள நிலையில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக உள்ளது.
வங்கக்கடலில் உருவான புரெவி புயல் மணிக்கு 18 கி.மீ. வேகத்தில் நகர்கிறது

Leave a Reply