Home > செய்திகள் > புயலின் போது முன்னெச்சரிக்கையாக இருப்பது எப்படி?

புயலின் போது முன்னெச்சரிக்கையாக இருப்பது எப்படி?

புயல் நேரத்தில் வெளியில் இருக்கும் மக்கள், மரங்கள், மின்கம்பங்கள் அருகில் நிற்க வேண்டாம்

 நிவர் புயல் தமிழகத்தை நெருங்கி வரும் நிலையில், புயலின் தாக்கத்திலிருந்து மக்கள் பாதுகாப்பாக இருப்பதற்கு தேவையான முன்னெச்சரிக்கை வழிமுறைகளை மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் வெளியிட்டுள்ளது.

 புயல் நேரத்தில் மெழுகுவர்த்தி, டார்ச் லைட், தீப்பெட்டி, பேட்டரி, உலர்ந்த உணவுவகைகள், குடிநீர், மருந்துகள், குளுக்கோஸ், Band aid உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய அவசர உதவி பெட்டகத்தை தயாராக வைத்திருக்க வேண்டும்.

 பதற்றத்தை தவிர்த்து வீட்டின் ஜன்னல்கள் மற்றும் கதவை அடைத்து வைக்க வேண்டும்.

 ஏழு நாட்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள், உணவு, நீர் மற்றும் மருந்துகளை கையிருப்பில் வைத்திருப்பது அவசியம்.

 காய்ச்சிய குடிநீரை பருகி, சுகாதாரமான உணவை உண்ண வேண்டும்

 புயல் கரையை கடக்கும்போது வாகனத்தில் பயணிக்க வேண்டாம். மரத்தடியில் வாகனங்களை நிறுத்த வேண்டாம்.

 புயல் கரையை கடக்கும்போது காற்றின் வேகம் திடீரென குறையும். அதனால் புயல் கடந்துவிட்டதாக எண்ண வேண்டாம்.

 மந்தநிலைக்கு பின் மீண்டும் சூறைக்காற்று பலமாக வீசும் என்பதால்இந்திய வானிலை ஆய்வு மையத்திலிருந்து 'புயல் கடந்துவிட்டது' எனும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும்வரை வெளியில் செல்ல வேண்டாம்

மந்தநிலைக்கு பின் மீண்டும் சூறைக்காற்று பலமாக வீசும் என்பதால்இந்திய வானிலை ஆய்வு மையத்திலிருந்து ‘புயல் கடந்துவிட்டது’ எனும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும்வரை வெளியில் செல்ல வேண்டாம்

 புயல் நேரத்தில் வெளியில் இருக்கும் மக்கள், மரங்கள், மின்கம்பங்கள் அருகில் நிற்க வேண்டாம்

புயல் நேரத்தில் வெளியில் இருக்கும் மக்கள், மரங்கள், மின்கம்பங்கள் அருகில் நிற்க வேண்டாம்

 பழுதடைந்த கட்டடங்களுக்குள் நுழைவதை தவிர்த்து, அருகில் உள்ள பாதுகாப்பு மையத்திற்கோ அல்லது பாதுகாப்பான கட்டடத்திற்கோ செல்லலாம்.

 நோய்தொற்று பரவாமல் சுற்றுப்புறத்தினை தூய்மையாக வைத்திருப்பதோடு, கிருமிநாசினிகளை தெளிக்கவும்

 இந்திய வானிலை ஆய்வு மையம், தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் மற்றும் TN SMART செயலி மூலம் பகிரப்படும் அதிகாரப்பூர்வமான அறிவுரைகளை மட்டுமே பின்பற்ற வேண்டும்

 மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம், படகுகளை இடைவெளி விட்டு கட்டி வைக்கவும். அவசர உதவிக்கு மாநில எண் 1070 மற்றும் மாவட்ட எண் 1077-ஐ தொடர்பு கொள்ளவும்

You may also like
வேளாங்கண்ணி தேவாலய பிரார்த்தனையில் முதல்வர் பழனிசாமி பங்கேற்றார்.
புரெவி புயல் கரையை கடக்க உள்ள நிலையில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக உள்ளது.
வங்கக்கடலில் உருவான புரெவி புயல் மணிக்கு 18 கி.மீ. வேகத்தில் நகர்கிறது
டிசம்பர் 4 இல் பாம்பன் இடையே ‘புரெவி’ புயல் கரையை கடக்கும் – வானிலை ஆய்வு மையம்

Leave a Reply